முதல்நாள் வகுப்பறை நுழைந்ததும்
பரிச்சயமே இல்லாத இடத்தில்
பளிச்சென்று உன் புன்னகை
கட்டி இழுத்து உன் அருகே அமரச்செய்தது...
நான் இருக்கின்றேன் என்று கைகோர்த்து
உன் மீது காதல் கொள்ளச்செய்தாய்...!
நாம் சுற்றித்திரிந்ததில்
தேய்ந்து போயின தெருக்கள்
நாம் சிரிப்பொழி தாங்கியபடி...
நீ இருக்கும் இதயத்தை
யாருக்கும் தர விருப்பம் இல்லை !
என் காதல் வட்டம் பறந்து விறிந்தது
உன்னை மட்டுமே சுற்றி...
துக்கத்தில் சிரித்ததும்
சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து அழுததும்
உன்னிடத்தில் மட்டுமே...!!!
உன் மகளுக்கு நான் மாமியார்
என் மகன் உனக்கு மருமகன்
என்றதற்க்கு....
ஒருவனையே மணந்துகொண்டு
என்றும் பிரியாமல் இருப்போம்
என்று கைகொட்டி சிறித்தாயே!!!
மணப்பெண் தோழியாய் நிற்ப்பாய்
என் புது வாழ்வு தொடங்கும் பதற்றத்தை
பக்கத்திலிருந்து தனிப்பாய்
என்றாயே!!!!
இத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு
எங்கேயடி சென்றாய்...???
உன்னைத் தேடித் திறிந்து
இந்த உலகமே தீர்ந்து போயிற்று...
உன் மூச்சுக் காற்றை கூட காணோமே!!!
என் உயிர் தோழியே...
இந்த மாபெரும் உலகத்தில்
உன் ஒருத்திக்கு மட்டும் தான்
இடம் இல்லாமல் போயிற்றா...???
காதலில் தோற்றதால்
காடு சென்றாயே!!!
என் காதலுக்கு என்ன பதில்
சொல்லப்போகிறாய்...???
5 comments:
This is my dedication to my dear Hema
ஆத்ம பந்தங்கள் காடு சென்றாலும்
உன்னை சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும்
அந்த ஆத்மா உயிர் வாழும்
உடலுக்கு தான் அழிவு
உயிருக்க்கு அல்ல
அனைவரிடமும் நட்பு பாராட்டு,
அவள் உன்னிடம் நட்பு பாராட்டுவாள்
மற்றவர் வடிவில்..
நன்றி விஐய்.
Arumaiyana kavithai.
இந்த கவிதையை படிக்கும் போது உங்கள் நட்பின் ஆழமும்
காதல் தோல்வியால் ஏற்படும் வலியையும் உணர முடிகிறது
Post a Comment