Thursday, August 15, 2013

Happy Independence Day

Can't live in India,
But Can't miss My India,

Because I am in love with my country, which had the origin of so many good things.

Its been corrupted and looted for centuries by kings, foreigners and our own politicians.
Since then we got the attitude of blaming each other for simply everything.

But at this time I would like you all remember what a great people are our ancestors who traveled across the boundaries, who taught the whole world about medicine, yoga, philosophy and trading.

Lets not forget our roots and our freedom fighters, though we don't remember them all the times at least today will salute them for their scarifies.

Lets fight back with our own people who can be teachers, schools, colleges, traders, government staffs, politicians and even someone who does not follow the simple traffic rules and fix them. 

Will start our second freedom fight to get a corruption free country.

"Happy Independence Day" to all my fellow Indians.

Monday, September 24, 2012

கூடங்குளத்தில் வீணாகிறது (வீணானது) பல கோடி!!!

போராடும் ஒரு பகுதி மக்கள் !
பொறுக்காத சக குடிமக்கள் !!

இத்தனை பொருட் செலவில், பல ஆண்டுகாலமாய் கட்டிய கட்டிடம் வீணாவதா?... ஆரம்பத்திலேயே போராடாமல் இப்போது எதிர்ப்பது நியாயம்தானா?

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும், பலவகை மின் சாதனங்களின் மின்சாரத் தேவையும் அணு உலையை அவசியமாக்குகின்றன. இந்த உலை இயங்கினால் தான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் என்பது போன்ற மாயையை நம் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது தான் உண்மை. இந்த உலை ஏதோ முழுவதுமாக தமிழ்நாட்டுக்கு பயன்படப்போவது போல் பொய் பிரச்சாரம் எதற்கு? இந்த மின்சாரத்தால்தான் இருளில் மூழ்கிய தமிழகம் ஒளி பெரும் என்றால், இதற்கு முன் எப்போதுமே இருளிலேயேவா இருந்தோம்.? எப்போதும் போல் தமிழ்நாட்டிற்கு அளித்து வந்த மின்சாரத்தை மத்திய அரசு அளித்தாலே பாதி மின் தடை நீங்கிவிடும். இந்த உலையில் இருந்து வரும் மின்சாரத்தில் எவ்வளவு மின்சாரம் யாருக்கு என்பதெல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளிவரப்போவதும் இல்லை. அணு உலை இயங்குவதால் தமிழ் நாட்டுக்கு என்ன லாபம்?. ஆனால் இந்த தருணத்தில் நாம் முக்கியமாக உணரவேண்டியது  பலவழிகளிலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான், அனைத்தும் அரசியல் லாபத்திற்காகவே நடத்தப்படுகின்றன.

காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, சிறுவாணி குறுக்கே கேரளாவின் புதிய அணை, கச்சத்தீவு பிரச்சனை, இலங்கை கடற்படையினர் பிரச்சனை இவ்வளவிலும் காஸ் பைப் கேரளாவில் இருந்து தமிழக விளை நிலங்கள் வழியாக கர்நாடகம் கொண்டு செல்லும் திட்டம் வேறு .
இதை எல்லாம் எதிர்த்து மத்திய அரசிடம் பேசவோ, வலிமையான போராட்டம் நடத்தவோ முடியாத மந்திரிகள், கட்சிகள், ஆனால் நாடே ஸ்தம்பிக்கும்  அளவில் ஊழல் நடத்த மட்டும் அதிகார மையம் மத்தியில் உண்டு.
இதை எல்லாம் மத்திய அரசு தெரிந்தேதான் செய்கிறதா?  அல்லது தமிழனும் தமிழ்நாடும் ஒதுக்கப்படுகிறதா???

500 கோடிக்கு ஒலிம்பிக் கிராமம் அமைத்து ஊர் அறிய, உலகறிய ஊழல் இந்தியாவின் முகத்திரையை கிளித்துக்கொண்டது. பல்லாயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம்  ஊழல். இதெல்லாம் ஒருபுறம் என்றால், நம் தமிழ் நாட்டில் 1000 கோடிக்கு கட்டிய புதிய "தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம்" புறக்கணிக்கபட்டது, அண்ணா நூலகம் மாற்ற அறிவிப்பு வந்து  பின் அது மக்கள் போராட்டத்திற்கு பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது.
கோடி கோடியாய் செலவழித்து அதற்கே அதற்க்கென்று பிரத்ஏகமாய் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை அரசிய காழ்புணர்ச்சி காரணமாக தூக்கி எரியும் உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது? அங்குமட்டும் மக்களின் வரிப்பணம் வீனாகவில்லையா? 1000 கோடி செலவு செய்தும் கட்டிடம் முடியும் முன்பே தான்தான்  திறந்துவைக்க வேண்டும், சரித்திரத்தில் இடம்பெறவேண்டும்  என்று கட்டி முடித்ததுபோல மேலும் பல கோடி செலவுசெய்து பிரம்மாண்ட பெருவிழா நடத்தி பெருமை தேடிக்கொண்ட சிறுமை தலைவருக்கு அது மக்கள் பணமென்று தெரியவில்லையா? அப்போது இந்த தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் வீணானது ஏனோ தெரியாமல் போனது. கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை எல்லாம் அரசுக்கு நஷ்டம் இல்லையா? அப்போ டாஸ்மாக் லாபத்தை மட்டும் நம்பியா அரசு செயல்படுகிறது, புது புது திட்டங்களை போடுகிறது?

ஏதோ இந்த அணு உலையால் மட்டுமே கோடிக் கோடியாய் நஷ்டம் ஏற்படும் போல மத்திய மாநில அரசுகள் பேசிவருகின்றன. ஆனால் இந்த அணு உலை என்பது ஒரு  விஞ்ஞான வளர்ச்சி அல்ல, அது தலைமுறைகளைத் தாண்டி வீசப்போகும் விஷமென்ற கதிர்வீச்சு.

எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு, பல முறை மக்களிடம் எடுத்துச்சொல்லி இன்று அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக ஒருமித்து குரல்கொடுக்கையில், அதை ஒட்டுமொத்தமாக நசுக்க முயல்வதா? தேச துரோகம் என்பதா?

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதற்காக ஒசாமாவை கொன்றுவிட்டேன் என்று மார்த்தட்டும் அமெரிக்கா எங்கே, 28 ஆண்டுகள் கடந்தும் "வர்றேன்  அன்டேர்சன் (Warren Anderson )" தப்பி ஓடவிட்டு இன்னும் பிடிக்க முடியாதபடி நாடகம் ஆடும் நமது இந்திய அரசு எங்கே?. அமெரிக்காவின்  இழப்பு 3000 உயிர்கள்- அதற்க்கே 10 ஆண்டுகளாக போரை நடத்தி வருகிறனர். இங்கோ போபாலில் 8000 கும் மேற்ப்பட்ட மனித உயிர் பலி, அதை தொடர்ந்த நோய்கள், மரபியல் மாற்றங்கள், இன்னும் தீரவில்லை அவர்களுக்கு. வழக்கு விசாரித்து முடியும் முன்னரே அவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பலர் இறந்துவிட்டனர். இதுதான் நமது நீதித்துறை. இதுபோல் தெரிந்தவை சில, தெரியாதவை பல, ஆனால் நமக்கு மட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை.

இத்தனை நாட்கள் கூடங்குளத்தில் கேட்கப்படாத நம் காதுகள் இன்று சிலரால் நின்று கவனிக்கப்படுகிறது, அந்த மக்களுடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் சத்தமாய் ஒலிக்கிறது, அதற்காக இத்தனை நாட்கள் ஒலிக்கவில்லை என்பது பொருளல்ல.

ஏதோ அணு உலை மட்டும்தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் எடுத்து சொல்வது போலவும், அதை விரும்பாத மக்கள் தேசத்துரோகிகள் போல இந்த பிரச்னையை அணுகுவது பகுத்தறிவு ஆகாது என்றே தோன்றுகிறது.
எந்த ஒரு புதிய கண்டிபிடிப்பும் ஆரம்பத்தில் வளர்ச்சியாக தெரிந்தாலும் அதை சிலகாலம் பயன்படுத்திய பிறகே, பயன்படுத்தியவர்களை வைத்து என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்று அறியவருகிறது. அதைப்போலத்தான் பல வளர்ந்த நாடுகளில் இவ்வளவு காலமும் ஏற்படாத விழிப்புணர்வை ஜப்பானியர்களின் உயிர் தியாகத்தால் உலகிற்கு இயற்கை புரியவைத்துள்ளது. (மேலை நாடுகள் அணு சக்தி என்ற பெயரில் நம்நாட்டை சந்தையக்குவது வேறு கதை...!!!).

நம்நாட்டின் இன்றைய தலைவர்களின் மீதோ, சட்டத்தின் மீதோ இருந்த நம்பிக்கை பலவிதங்களில் அவர்களாலேயே அழிக்கப்பட்டு விட்டது. இதுவரை நீதி கிடைக்காத பல விபத்துகள், வருடா வருடம் சிவகாசியில் விபத்து ஏற்பட்டும் எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறைகளோ, சட்டமோ கொண்டுவரப்படவில்லை. சூடு, சொரணை அற்ற மக்களின் உயிர் போகும் இல்லை என்றால் கை கால்கள் போகும் என்று தெரிந்தும் எதிர்த்து கேட்க  இயலாமல் சாவின் விளிம்பில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

இந்த அரசை... அதிகாரிகளை... நீதித்துறையை... நம்பி அணு உலையா?

இன்னும் ஏமாற தமிழர்கள் என்ன வீரம் இல்லா முட்டாள்களா?
சட்டப்பேரவையை மருத்துவமனை ஆக்க முடியும்போது, நம் தமிழக அரசு, மத்திய அரசும் சேர்ந்து இந்த 1400 கோடிக்கு மாற்று வழி கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு உண்மையான உணர்வின் உரிமை போராட்டத்திற்காக 1400 வீணானதாக இருக்கட்டுமே!!!
மாற்றுவழி மின்சாரம் கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு சமூக மக்களின் போராட்டம் வென்றதாக சரித்திரம் சொல்லட்டும் !!!
இந்த அணு உலையை அதன் வெற்றிச் சின்னமாக்குவோம்!!!

Tuesday, February 14, 2012

ஆர்.டி.ஐ.ஆயுதம்...அலறும் அதிகாரிகள்....

''ஓட்டுப் போடுறது மட்டுமே நம்ம ஜனநாயக உரிமை இல்லை. ஓர் இந்தியக் குடிமகனா, நமக்கு நிறையவே உரிமைங்க இருக்கு. அரசாங்கத்தோட உயர் பொறுப்புகள்ல இருக்கறவங்கள நிக்க வெச்சு கேள்வி கேட்கவும், அவங்க தவறு செய்யுறபட்சத்துல தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த உரிமைகளுக்கு வலிமை இருக்கு. அதை நான் சரியா பயன்படுத்திட்டு இருக்கேன்!''

- குரல் உயர்த்திப் பேசவில்லை. இருந்தாலும் தைரியத்தால் நிரம்பி இருந்தன பூமாவின் வார்த்தைகள்!

குழந்தைகள், கணவர் என்று குடும்பம் சுமக்கும் இல்லத்தரசிகளில் ஒருவர்தான் பூமா. ஆனால், அதோடு தன்னை சுருக்கிக் கொள்ளாமல், 'ஆர்.டி.ஐ' எனப்படும் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்'(RTI - Right to Information Act) மூலம் தனக்கும், தன்னைச் சுற்றி வசிப்பவர்களுக்குமான அடிப்படைத் தேவைகளை பெற்றுத் தரும் பெண் போராளியாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்!

''என்னோட பசங்கள ஸ்கூல்ல இருந்து ஈவ்னிங் 4.15-க்கு கூட்டி வருவேன். திரும்பவும் ஆறு மணிக்கு அவங்களோட நானும் யோகா கிளாஸுக்குப் போயிடுவேன். இடைப்பட்ட நேரத்தில் பேசலாமா..?'' என்று நம்முடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் சொன்னார் பூமா. குறித்த நேரத்தில் சென்னை, அம்பத்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் ஆஜரானோம். எளிமையான உடையும், எதார்த்தமான பேச்சுமாக அறிமுகமானார் பூமா!

''ஊத்துக்கோட்டை பக்கத்துல இருக்கற அனந்தேரி கிராமம்தான் என்னோட தாய்பூமி. ப்ளஸ் டூ வரைதான் படிச்சுருக்கேன். என்னோட காதல் கணவர் ஸ்ரீராமன், தனியார் நிறுவனத்தில் ஜி.எம். அவரோட டிரான்ஸ்ஃபர்களால் 14 வருஷமா இந்தியாவோட பல ஸ்டேட்களை, மக்களை, மொழிகளை, கலாசாரங்களைப் பழகியாச்சு. இந்த அனுபவங்கள்தான் இப்பவும் அரசு அதிகாரிகள், காவல்துறைனு யார்கிட்டயும், எந்தத் தயக்கமும் இல்லாம என்னை அணுக வைக்குது'' என்ற பூமா, முதல் முறையாக 'தகவல் அறியும் உரிமைச் சட்ட'த்தை கையில் எடுக்க வைத்த அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்தார்.

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன குடும்பத்தோட ஆந்திராவுக்கு டூர் போயிருந்தப்போ, டிரெயின்ல டிக்கெட் புக் செய்திருந்தோம். எங்களோட ஸீட்ல வேற ஆட்கள் உட்கார்ந்திருந்தாங்க. கேட்டா, 'டி.டி.இ-தான் உட்காரச் சொன்னார்’னு சொன்னாங்க. அவர்கிட்ட கேட்டப்ப, 'உங்களுக்கு கன்ஃபார்ம் ஆன ஸீட்ஸ் இது இல்லை’னு சொன்னவர், வேற ஸீட்டையும் தரல. அப்போ என் கணவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் வலுக்க, அதை நான் என் மொபைல்ல ரெக்கார்ட் செய்தேன்.

வேற வழியில்லாம டிரெயின்ல நின்னுட்டே வந்த நாங்க, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, ஸ்டேஷன் அதிகாரிகள்கிட்ட நடந்ததைச் சொல்லி, ஆதாரமா எங்க டிக்கெட், மொபைல் ரெக்கார்டை எல்லாம் காட்டி, நடந்த சம்பவத்தை அவங்க கைப்பட எழுதி வாங்கிக்கிட்டோம். டூர் முடிச்சு தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, நடந்த எல்லா விஷயங்களையும் சரியா குறிப்பிட்டு, ஆர்.டி.ஐ. சட்டப்படி கடிதம் போட்டோம். அந்த டி.டி.இ-க்கு தண்டனையா, அவரோட ஊதிய உயர்வை மூணு வருஷத்துக்கு நிறுத்தி வெச்சுடுச்சு ரயில்வே நிர்வாகம். லஞ்சம் வாங்கிக்கிட்டு, எங்க ஸீட்டை மத்தவங்களுக்கு மாற்றிக் கொடுத்ததோட, அதிகார திமிர்ல பேசின அந்த ஆளுக்கு கிடைச்ச இந்தத் தண்டனையை, ஒரு குடிமகனோட வெற்றியா நாங்க கொண்டாடினோம்...''

- இதில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறது பூமாவின் ஆக்கப்பூர்வ முயற்சிகள்.

'இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சட்டத்து மேல எனக்கிருந்த மரியாதை பல மடங்கு கூடிடுச்சு. என்னோட தைரியம் அதைவிட பல மடங்கு உசந்துடுச்சு. கணவரும் என்னை உற்சாகப்படுத்தினார். என் பசங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கறதுக்கு தாமதமாயிட்டே இருந்தது. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஆர்.டி.ஐ. சட்டப்படி ஒரு தபால் அனுப்பினேன். ஒரே வாரத்துல பாஸ்போர்ட் வீடு தேடி வந்துடுச்சு.

சமீபத்தில் வீட்டை புதுப்பிச்சோம். எங்க வீட்டுல வேலை பார்த்திட்டிருந்த கார்பென்டர்கள், வேற ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சதும், அங்க போயிட்டாங்க. பலமுறை தொடர்புªகாண்டும் சரியான பதில் இல்லை. 'இதுக்குக் கூடவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுக முடியும்?’னு நீங்க கேட்கலாம். நிச்சயமா. அந்த கார்பென்டர்கள் எனக்குக் கொடுத்திருந்த பில் உள்ளிட்ட ஆவணங்களை வெச்சுக்கிட்டு, கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டேன். அங்க அது தாமதமாகவே, இந்த விஷயத்தை ஆர்.டி.ஐ. மூலமா நான் கேள்வி எழுப்பினேன். அதுக்குப் பிறகு ஆர்.டி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்க, உடனடியா வந்து வேலையை முடிச்சுக் கொடுத்தாங்க. 15 வருஷமா இழுத்தடிக்கப்பட்ட எனக்குத் தெரிந்தவரின் நில பட்டா பிரச்னைக் கும் ஆர்.டி.ஐ. மூலமாவே பலன் கிடைச்சுது. இதைஎல்லாம் உறவினர், அக்கம் பக்க நண்பர்கள்னு எல்லார்கிட்டயும் பகிர்ந்து, அவங்களுக்கும் ஆர்.டி.ஐ. நம்பிக்கையை கொடுத்துட்டிருக்கேன்'' என்ற பூமா, தொடர்ந்து சமூகப் பிரச்னைகளையும் ஆர்.டி.ஐ. மூலம் எதிர்கொண்டு வருகிறார்.

தெரு பராமரிப்பு, சாக்கடை, கிளை அஞ்சலகம்... என அடுத்தடுத்து பூமா அதிரடி ஆக்ஷன்களில் இறங்க, பகுதி மக்களும் அவருடன் கைகோத்துள்ளனர்.

''ஆரம்பத்துல பொதுப் பிரச்னைக்கான பெட்டி ஷன்கள்ல கையெழுத்துப் போடவே பலரும் தயங்கினாங்க. ஆனா, ஒவ்வொரு படியா வேலைகள் நடக்கறதைப் பார்த்துட்டு, 'ஆளும்பேருமா இறங்குவோம் வாங்க...’னு பலரும் இணைய ஆரம்பிச்சுருக்காங்க'' என்று சொல்லும்போதே, பெருமிதம் அந்த முன்னோடியின் முகத்தில்.

''பாதாள சாக்கடை, குப்பை கான்ட்ராக்ட், மருத்துவமனை குறைபாடுகள்னு எந்தப் பிரச்னையா இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட முறையிடுங்க. ரியாக்ஷன் இல்லைனா, அந்தப் பிரச்னை பற்றி நமக்குத் தெரிய வேண்டிய விவரங்களை கேள்விகளா எழுதி, 10 ரூபாய்க்கான 'நீதிமன்ற முத்திரை வில்லை' (Court Fee Stamp) ஒட்டி, பக்கத்துல இருக்கற தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்துக்கு அனுப்புங்க. அடுத்த 30 நாட்களுக்குள்ள சரியான காரணங்களோட அவங்க பதில் அனுப்பி வைப்பாங்க. விடாம ஃபாலோ பண்ணுங்க. தவறு செய்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவே இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும்!'' என்று எனர்ஜி கொடுத்த பூமா, தன் குழந்தைகள் ஸ்ரீஷ், ஸ்ரீவத்ஷன் இருவரையும் யோகா வகுப்புக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்!

வாழ்த்துகள் போராளியே !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சில குறிப்புகள்...

முதலில், நீங்கள் எதுதொடர்பாக புகார் செய்ய விரும்புகிறீர்களோ... அதை உரிய அலுவலகங்களுக்கு முறைப்படி புகார் மனுவாக அளிக்க வேண்டும் (உதாரணத்துக்கு, சென்னையில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்றால், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிக்கு புகார் அனுப்ப வேண்டும்).

உங்கள் புகார் மனுவுக்கு உரிய பதில் இல்லை என்றால்தான், 'பொதுத் தகவல் அதிகாரி'யை தொடர்பு கொள்ள வேண்டும் (ஒவ்வொரு அரசு அலுவலகத்திலுமே இப்படி ஒரு அதிகாரி இருப்பார்). ஏற்கெனவே நீங்கள் செய்த புகாரின் நகல்களுடன், பத்து ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற முத்திரை வில்லை ஒன்றை புகாரின் முதல் பக்கத்தில் ஒட்டி அனுப்பினால் போதும்.

இதற்கான பதில் முப்பது நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், அடுத்தாக 'மேல்முறையீட்டு அதிகாரி'க்கு, புகாரை அனுப்பலாம். அதற்கும் பதில் கிடைக்க தாமதமானால் 'இன்ஃபர்மேஷன் கமிஷனர்' (தமிழ்நாடு - சென்னை) அலுவலகத்துக்கு அனுப்பலாம். இந்த நடைமுறைகளில் ஏதாவது ஓர் இடத்திலேயே உரிய தகவல் கிடைத்துவிடும். நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.

முதல் தடவை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு செய்யும்போது மட்டும் நீதிமன்ற முத்திரை வில்லை ஒட்டினால் போதும். ஒவ்வொரு முறை அனுப்பும் கடிதங்களின் நகல் மற்றும் அனுப்பியதற்கான அத்தாட்சி ஆகியவற்றை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடிதங்களை பதிவுத் தபாலில் அனுப்புவது நல்லது. -- Anantha vikadan

Wednesday, November 30, 2011

சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி, அதை விற்கிறார் சோனியா காந்தி!

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு

'பரிசுத்தமான லட்சியங்களுக்கு விரோத​மாக நமது செயல்கள் உள்ளன. உலகை மாற்ற வேண்டும் என்றால், நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும். சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது’ - மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், அந்த நாடுகளை எவ்வாறு மீளாத கடனாளியாக... அடிமையாக மாற்றின என்பதைக் குற்ற உணர்வுடன் 'ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்’ புத்தகத்தில் பதிவு செய்து இருப்பார் ஜான் பெர்கின்ஸ். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், இந்தியாவும் இப்படிச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!

சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகள். முதல்வர்கள் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மட்டும் இன்றி, கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் எஃப்.டி.ஐ. சட்டத்துக்கு அகாலிதளம் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தோம். இவர், நாடாளுமன்றத்தில் எஃப்.டி.ஐ. குறித்த விசாரணை நடத்திய நிலைக் குழுத் தலைவராகவும் இருந்து அறிக்கை கொடுத்தவர்.

''இந்தக் கொள்கையை ஏற்று முதலில் அனுமதி கொடுத்தது பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி​தானே. இப்போது நீங்களே எதிர்ப்பது ஏன்?''

''நாங்கள் ஒற்றை பிராண்டில் 26 சதவிகிதம் கொடுத்தது உண்மை. ஆனால், அது ஒரு பரிட்சார்த்த ரீதியாகவே கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த அனுபவத்துக்குப் பிறகு, இதைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம். சிங்கிள் பிராண்ட் என்று அனுமதி வாங்கிவிட்டு, பின்னர் மல்டி பிராண்ட் வியாபாரங்களை நடத்தினார்கள். அதனால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்து, இதில் நேரடி அன்னிய முதலீடு தேவை இல்லை என்று 2009-ம் ஆண்டு வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவில் அறிக்கை கொடுத்திருக்கிறோம்.''

''இந்த அனுமதி மூலம் பணவீக்கம் கட்டுக்குள் வந்து மந்த நிலையில் இருக்கும் அன்னிய முதலீடு மேலும் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறதே?''

''அது உண்மை அல்ல. நம்முடைய சந்தை நிலைமையும் வேலை வாய்ப்புகளும்தான் பறிபோகும். உணவு உற்பத்தியுடன், உணவு சாராத மற்ற உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நுகர்வோர்கள் துன்பத்துக்கு ஆளாகப்போகிறார்கள். வால்மார்ட், கேர் ஃபோர் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாடுகளில், சிறு கடைக்காரர்கள், சிறு சிறு உற்பத்தியாளர்கள், மொத்தமாக நுகர்வோர்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண விவசாயிக்கு இன்றைய தினம் அரசு கொடுக்கும் குறைந்தபட்ச விலையே சரியாகப் போய்ச் சேராத நிலையில், இந்த அன்னிய கம்பெனிகள் என்ன கொடுத்துவிடுவார்கள்?''

''உள்ளூர் உற்பத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பது நல்லதுதானே?''

''அதைக் கண்காணிக்க முடியாது, கட்டாயமும் இல்லை. செருப்பு, தொடங்கி ஆடைகள் வரை எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ, அந்த நாடுகளில் இருந்து வாங்கிவந்து இங்கே விற்பார்கள். சில்லறை வணிகம் அனுமதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இதுதான் நடக்கிறது. இந்த ஆபத்தான சந்தை நமக்கு தேவை இல்லை. இந்த நேரடி அன்னிய முதலீடு நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றும். குறிப்பாக குழந்தைகளின் மனோபாவம் மாறும். அவர்களுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடை, அணிகலன்களின் எல்லாம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களால் ஆதிக்கம் பெறும். மோகம் அதிகரிக்கும். இதில் எந்தப் பலனும் இல்லை என்பதுதான் உண்மை.''

இந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நம்ம ஊர் ஆட்களிடம் பேசினோம்.

வெள்ளையன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்,

''மகாத்மா காந்தி ரத்தம் சிந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். சோனியா காந்தி அதை மீண்டும் அன்னியருக்கே விற்கிறார். அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு பல்வேறு நியாயங்களை அடுக்கினாலும், அவர்கள் இங்கே கால் ஊன்றி ஏகபோகம் அடைந்த பிறகு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை கிட்டத்தட்ட தங்களின் அடிமைகள் ஆக்கிவிடுவார்கள்.

சிமென்ட், மணல் விலையில் கொள்ளை அடிப்பதுபோல அன்னிய நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டு பொருட்களின் விலையை உயர்த்தி விடுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாததுபோல் அப்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் திராணி நம் தலைவர்களுக்கு இருக்காது. இதற்கு உதாரணம், கோக், பெப்ஸி போன்ற பானங்கள்தான். அவை வளர்ந்ததும், உள்ளூர்க் குளிர் பானங்கள் அனைத்துமே அழிந்துவிட்டன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி புரிய அன்னிய நிறுவனங்கள் ஒன்றும் சேவை அமைப்புகள் அல்ல. அவர்கள் நம் நாட்டுக்கு கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவன் இந்தியனே அல்ல.''

விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்,

''இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத்தில் இருப்பவர்கள் ஏழு கோடிப் பேர். இவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் 21 கோடிப் பேர். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சில்லறை வணிகத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. எப்படி? 28 கோடி பேரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு 40 லட்சம் பேருக்கு அன்னியனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் வேலை வாய்ப்பா?

மத்திய அரசு சொல்வதுபோல, அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியாவில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணமே இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவுக்கு மட்டும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, நம் நாட்டு மக்களின் பணம் நமது தேசிய வங்கிகளில் இருந்தது. இன்னொன்று சில்லறை வணிகத்தில் பல கோடிப் பேர் இருந்ததால் தொழில் நிலைத்தது. எனவே, எக்காரணம்கொண்டும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.''

தேசிகன் அறங்காவலர், கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் இந்தியா,

''உலகம் முழுவதும் பல நாடுகள் திவால் ஆகி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் சுதாரித்துக்கொண்டு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள முனைகின்றன. ஆனால், மத்திய அரசோ அன்னிய முதலீடு என்கிற முதலையிடம் மக்கள் தலையை நுழைக்கிறது.

கோயில் வாசலில் பூ வாங்கி வைத்துக்கொள்ளும் நிலைமை மாறி, சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் அநியாய விலை கொடுத்துப் பூ வாங்கும் நிலை ஏற்படும். அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டிலேயே பொருளை உற்பத்தி செய்தால் மட்டுமே, நம் நாட்டுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அவை இங்கே இருக்கும் பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்கிப் பதுக்கிவைத்து கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்யும். இதனால் நம் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை. இது நம்மைப் பகடைக்காய்களாக்கி அன்னிய நிறுவனங்கள் நடத்தும் சூதாட்டத்துக்கே வழி வகுக்கும்.''

சின்னசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்,

''10 ஏக்கரில் விவசாயம் செய்பவன்கூட சிறு விவசாயிதான். ஏனெனில், உரம், மின்சாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் அவனுக்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 90 சதவிகிதம் சிறு விவசாயிகள்தான். இனி அன்னிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்வார்கள்; நல்ல விலை கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள். அப்படியே நல்ல விலை கொடுக்கவும் செய்வார்கள். இப்படி செய்யும்போது, இதர உள்நாட்டு முதலாளிகள் பராம்பரியத் தொழிலைவிட்டு அழிந்துபோவார்கள். படிப்படியாக மொத்த விவசாயிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பின்பு, அன்னிய நிறுவனங்கள் திடீர் என்று கொள்முதல் விலையைக் குறைத்துவிடுவார்கள். விவசாயிகளுக்கு வேறு வழி இருக்காது. அதனால், அடிமாட்டு விலைக்குத்தான் பொருளை விற்க வேண்டும்.

அடுத்த தாக்குதல் இன்னும் அபாயகரமானது. தாங்கள் கொடுக்கும் விதையைத்தான் நட வேண்டும்; நாங்கள் சொல்லும் பயிரைத்தான் வளர்க்க வேண்டும் என்று மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் திணிப்பார்கள். மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளை நடுத்தெருவுக்குத்தான் கொண்டுவரும். இதனால் நாட்டுக்குத்தான் கேடு!''

- சரோஜ் கண்பத், டி.எல்.சஞ்சீவிகுமார்



காங்கிரஸிலும் எதிர்ப்பு!



எதிர்க் கட்சித் தலைவரான ஜோஷி மட்டுமல்ல ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு வந்துள்ளது. இந்த எஃப்.டி.ஐ-யை அனுமதி அளிக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது எதிரொலித்​தது. சோனியா காந்தியின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, முகில் வாஸ்னிக் போன்ற காங்​கிரஸ் அமைச்சர்களும் தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் தினேஷ் திரிவேதி போன்றவர்களும் தங்கள் கட்சி சார்பில் இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Thanks Anandha vikadan

Tuesday, April 12, 2011

கருணாநிதி பதில் சொல்வாரா????

இன்றைய மாலை மலரில் வாசகர் வெங்கட்ராஜ், கேட்கிறார்:

கருணாநிதி​க்கு:
1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்னைப் பின்பற்றவேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தை தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ? ஏன் ஆயிரக்கணக்கான்வர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளி நாட்டில் வாழ்கிறேன். ஒரு அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசு கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு ?.

13. மின் வெட்டை தடுக்க 5 ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?

15. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்கு சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பீh;கள்?

16. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து எடுத்தது ஏன்?

17. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவி தன் வாரிசுகளுக்கு வாங்குவதற்கு தவிர நீங்கள் டெல்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

18. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றிற்கு ஓடோடி செல்லும் நீங்கள் , எத்தனை முறை இறந்து போன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள்​?

19. பல வருடங்களாக கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களை விட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி ?

20. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் , மணல் கொள்ளை, திரைப்படத்துறை முழுமையான ஆக்ரமிப்புக்கும் உள்ள தொடர்புகளை உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

----
திரு.வெ​ங்கட்ராஜ் உங்களது ஒரு கேள்விக்குக் கூட பதில் கிடைக்காது.

Friday, April 1, 2011

கடவுளே எங்கள எப்படியாச்சும் காப்பாத்து....

தமிழ் நாட்டு மக்களே எப்படியய்ய ஊருக்குள்ள தன்மானத்தோடு இருக்கீங்க??? ஒருநாள் கொஞ்சநேரம் இந்த டிவி யை பார்த்ததுக்கே ரொம்ப கேவலமா இருக்கு, வேட்பாளர்கள் முஞ்சிஎல்லாம் பாத்தாலே அவங்க தகுதி என்னனு தெரியுது. இதவேற எப்போ பாத்தாலும் திரும்ப திரும்ப போட்டு காட்டுறாங்க. அவங்க அவங்களுக்கு ஒரு டிவி வேற. இந்த மோகரகட்டைங்கள நம்ம தமிழ்நாட்டோட தலை எழுத்தை மாற்றப் போகுதுங்க. நல்லவேளை நான் ஊருக்குள்ள இல்ல. கண்டிப்பா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். கூடிய சிக்கிரம் அது நடக்கும்.
விஜயகாந்த் வேட்பாளர்களை எல்லாம் பாத்தீங்களா, என்ன எதுன்னவது அவனுங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியல. பேப்பர கிழிச்சு போட்டு விசில் அடிச்சு கைதட்டி படம் பாத்தவன் எல்லாம் இன்னக்கி வேட்பாளர!!!!.... ஜெயலலிதா, விஜயகந்துனு இந்த ரெண்டு ரெண்டுகேட்டனுங்கள நம்பறதே வேற வழி இல்லாமதான். ஆனா அவரோட திரைமறைவில் இருக்குற இந்த அல்லக் கைகளெல்லாம், யாரு எவரு, என்ன தகுதி இருக்கு நம்பி ஓட்டு போடா.
கடவுளே எங்கள எப்படியாச்சும் காப்பாத்து....

Saturday, March 5, 2011

காதலில் விழுவோமா!

காதலிப்பதை காதலிப்பதால்,
காதலை காதலிக்கிறேன்!!

சூழலை மறக்கச் செய்ததாலோ,
சுற்றம் மறந்ததாலோ,
காதலிக்கிறேன் காதலை...!!!

எதிர் கொண்ட பார்வையிலே
எடுத்துச் சென்றாய் முழுமையாய் என்னை.
நீண்ட நேர காத்திருப்பும்,
நெடுநேர உரையாடலும்,
மறந்து போனது பசி, உறக்கம்!!

கை பிடிக்கும் நாளை எண்ணியே,
கனவுகள் எப்போதும்.
உறவுகளை பிரியும் வருத்தத்தை விட,
உன்னை கைபிடிக்கும் குதுகலமே அதிகம்!
புரியாத உணர்விலே,
பூரித்த நாட்கள்...

சிரித்து சிறகடித்த நாட்கள்
நகர்த்தாமலே நகர்ந்த காலங்கள்,

இன்றைய காதலர்களை பார்க்கும்போது,
சிறிதாய் ஒரு பொறாமை!

மீண்டும் ஒருமுறை காதலிக்க ஆசை,
நம் காதலை புதுப்பித்தால் என்ன?