காதலிப்பதை காதலிப்பதால்,
காதலை காதலிக்கிறேன்!!
சூழலை மறக்கச் செய்ததாலோ,
சுற்றம் மறந்ததாலோ,
காதலிக்கிறேன் காதலை...!!!
எதிர் கொண்ட பார்வையிலே
எடுத்துச் சென்றாய் முழுமையாய் என்னை.
நீண்ட நேர காத்திருப்பும்,
நெடுநேர உரையாடலும்,
மறந்து போனது பசி, உறக்கம்!!
கை பிடிக்கும் நாளை எண்ணியே,
கனவுகள் எப்போதும்.
உறவுகளை பிரியும் வருத்தத்தை விட,
உன்னை கைபிடிக்கும் குதுகலமே அதிகம்!
புரியாத உணர்விலே,
பூரித்த நாட்கள்...
சிரித்து சிறகடித்த நாட்கள்
நகர்த்தாமலே நகர்ந்த காலங்கள்,
இன்றைய காதலர்களை பார்க்கும்போது,
சிறிதாய் ஒரு பொறாமை!
மீண்டும் ஒருமுறை காதலிக்க ஆசை,
நம் காதலை புதுப்பித்தால் என்ன?
No comments:
Post a Comment