சுயநல வாதிகளின் கூடாறம்
இந்த மென்பொருள் துறை...
எப்படி சொல்கிறேன் என்கிறீர்களா..??
ஏனென்றால் நானும் ஒரு சுயநலவாதிதான்...
கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும்,
முகவரி கொடுத்தவனை மறந்து...
பறந்து இல்லை... இல்லை... தாவிச் செல்லும்
இதயமற்றவனுக்கு பெயர்
software engineer
விடியவிடிய வேலை பார்ப்பான்,
வெளிநாட்டினர் சுகமாய் வாழ!
சம்பாதித்ததை கொண்டுபோய்
"சால்சா"வில் தொலைப்பான்..
மூளை இருந்தும்...
முதுகெலும்பு இல்லாதவன்.
ஒருமுறை பறந்து சென்று
வந்துவிட்டால் போதும்...
50 சவரனில் இருந்து 100 ஆக்கி
அவனையே விற்றுக்கொள்வான்...
ஆனால் வாங்கத்தான் ஆளில்லை...
வேலை இல்லாதவனங்கள,
யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...???
12 comments:
எல்லரும் அப்படி இல்ல வலர்... சில பேர் அப்படி பன்ரதால எல்லரயும் அப்படி சொல்ரது தப்பு...
~ஜனார்த்தனன்
மரியாதைக்குரிய நண்பரே!
//கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும், முகவரி கொடுத்தவனை மறந்து... பறந்து இல்லை... இல்லை... தாவிச் செல்லும் இதயமற்றவனுக்கு பெயர் software engineer //
உங்கள் கண்ணோட்டத்தில் பார்த்தால் உலகத்தில் உள்ள 90 விழுக்காடு மக்கள் சுயநலவாதிகள் தான் !
ஒருவன் தன்னுடைய முன்னேற்றத்திற்காக ,அதற்கு தக்கவாறு முன் அறிவிப்பு செய்திவிட்டு அந்த அலுவலகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ராஜினாமா செய்வதை நீங்கள் ஏன் குற்றமாக பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை ! இது எல்லா துறையிலும் நடப்பது தான். இந்திய அரசு சட்டப்படி, இது ஒரு தொழிலாளியின் உரிமை ! முன் அறிவிப்பு செய்யாமல் சென்றால் ,அது தவறு ,அப்படி ஒரு சிலர் செய்வதற்கு அனைவரையும் குற்றம் சொல்லுவதும் தவறு ! இதயமற்றவர்கள் என்று ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் இழிவு படுத்தாதீர்கள் !
நாரயணமூர்த்தியின் வார்த்தைகள் உங்களுக்கு நினைவில் இருக்கும் .." Love your work, not the company.because you never know when company would stop loving you " .
//விடியவிடிய வேலை பார்ப்பான், வெளிநாட்டினர் சுகமாய் வாழ!-----//
வெளி நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதனால்தான் இதற்கு பெயர் S/w ஏற்றுமதி.... ஏற்றுமதி அதிகரித்தால் தான் எந்த நாடும் உயர முடியும். இந்திய s/w துறையின் வளர்ச்சிக்கு காரணம் வெளி நாட்டு வாடிக்கையாளர்கள்..அவர்களின் $. அதானால் தான் அதிக லாபம் சம்மாதிக்க முடிகிறது...ஊழியர்களுக்கும் அதிக சம்மளம் குடுக்க முடிகிறது....இந்தியாவின் அன்னிய செலவாணியும் உயர்கிறது. .நீங்கள் செய்திதாள்களில் வாசித்தீர்ப்பீர்கள் ..உலக நாடுகளின் அதிபர்கள் எங்கள் நாட்டில் முதலீடு செய்ய வாங்க என்று வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள் . உங்கள் கருத்து படி வெளிநாட்டினர் சுகமாய் வாழ இவர்கள் ஏன் அழைப்பு விடுக்கிறார்கள்? .
தற்போது இந்திய நிறுவனங்களும் (BSNL,AirTel,Relaiance,SBI.....) , இந்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களும் ( ICICI, HDFC, HSBC ,ESSAR..) s/w பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறார்கள், அதற்காக முதலீடு செய்கிறார்க்ள்.. ஆயிரக்கணக்கான software engineer இவர்களுக்காக வேலை பார்க்கிறார்கள். நம்புங்கள் அவர்கள் இந்தியர்களுக்காகவும் வேலை செய்கிறார்கள் !
//சம்பாதித்ததை கொண்டுபோய் "சால்சா"வில் தொலைப்பான்.. ......//
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் , எத்தனை சதவிகிதம் பேர் அப்படி இருக்கிறார்கள் ! நீங்கள் அப்படியா ? உங்களின் நண்பர்களில் எத்தனை சதவிகிதம் பேர் அப்படி இருக்கிறார்கள் ! 10% பேர் என்று ஒரு வாததிற்கு வைத்து கொள்வொம்..உங்களுக்கு வேற துறையில் வேலை செய்யும் நண்பர்கள் இருக்கிறார்களா? ! அவர்களிடம் கேட்டுபாருங்கள் இதைவிட அதிமாக/அல்லது ஒத்ததாக தான் இருக்கும் ! என்ன ஒரு வித்தியாசம், அவர்கள் டாஸ்மார்க்கில் குடிப்பார்கள், நம்மாளு பாரில் போய் குடிப்பான்.(நான் பெரும்பான்மையை வைத்து சொல்கிறேன், மற்ற துறை பார் குடிகாரர்கள் கோவித்து கொல்ல வேண்டாம்) குடி என்று பார்த்தால் எல்லாம் ஒண்ணு தான்.....சம்மாதித்த பணத்தில் அதிகமாக "சால்சா" வில் தொலைப்பது கண்டிப்பாக நம்மாளு கிடையாதுங்கோ ! (கட்டிட கூலி தொழிலாளர்கள், சம்மாதித்த பணத்தில் 60% குடிக்காக செலவு செய்கிறார்கள்...பாவம் உடல் வலி போக்க அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி )
//மூளை இருந்தும்... முதுகெலும்பு இல்லாதவன். ..//
இதை எதை வச்சு சொல்றீங்கனு எனக்கு புரியலைங்கே..! எனக்கு தெரிந்த வரை நம்ம துறை சார்ந்த வர்களுக்கு தன்னம்பிக்கையும்(சிலருக்கு தலைக்கணமும்) , சுயமரியாதையும் அதிகம் தான்..குறிப்பா பெண்களுக்கு !
//ஒருமுறை பறந்து சென்று வந்துவிட்டால் போதும்... 50 சவரனில் இருந்து 100 ஆக்கி அவனையே விற்றுக்கொள்வான்.......//
நமது சமூக சூழலில் ,திருமண வரதட்சணை என்பது ஒரு prestige issue - ஆக பார்க்க படுகிறது. நம்முடைய அன்புக்குரியவர்களே அவங்க பையனுக்கு இவ்வளவு செய்தார்கள், நம்ம பையன் வெளி நாட்டிற்கெல்லாம் சென்று இருக்கான் (வெளி நாட்டிற்கு சென்று வருவதைஒரு தகுதியாக நினைக்கிறார்கள் பெரும்பான்மையானோர்) அவனுக்கு இவ்வளவு செய்தால்தான் பெருமையாக இருக்கும் என்று நம்புகிறார்கள்...பெரியோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் தான் இது அதிகமாக இருக்கிறது..பெரியோர்களால் நிச்சயக்கப்படும் திருமணங்களில் மணமகனின் பங்கு என்னவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும் ...so .விற்பது யார்?
(வரதட்சணை வாங்குவதை தவறு என்று தெரிந்தும், அன்புக்குரியவர்களின் குருட்டு பெருமைக்காக செய்ய வேண்டி செய்ய இருப்பதை நினைத்து வெட்கபடுகிறேன்..கண்டிப்பாக அடுத்த தலைமுறையில் இந்த வரதட்சிணை இருக்காது என்று மனப்பூர்வகமாக நம்புகிறேன்.. )
வியாபாரம் என்பது இரு புறமும் சம்மந்த பட்டது ! ஒரு பொதுவான வாதத்தை நான் வைக்கிறேன் நான் தவறா கூட இருக்கலம்..பெரும்பான்மையான பெண்கள்/அல்லது பெண்கள் வீட்டினர், ஏன் மணமகன் அதிக படித்தவர்களாகவோ,அதிகம் சம்மாதிப்பாதிப்போராகவோ ,அதிக உலக அறிவு உள்ளவராகவோ, வெளி நாட்டிற்கு சென்று வந்தவராகவோ ,அல்லது வெளி நாட்டில் வசிப்பராகவோ இருக்க வேண்டும் என்று விருப்பபடுகிறார்கள் ? அதனால் தானே அவர்களின் சந்தை மதிப்பு உயர்கிறது ! (50 , 100-ஆவது யாரலே?)
பொற்காலம் என்று ஒரு படம் வந்தது ..அதில் முரளி தன் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை (நான் மேலே கூறியது போல ) தேடி கொண்டே இருப்பார்....இறுதியில் வடிவேல் ஒரு வார்தை சொல்லுவார் .."ஏன்பா உன் தங்கச்சிக்கு ஊரெல்லாம் தேடினியா ...நான் வசதி இல்லாதவன் என்பதால் தானே என்னை மறந்துட்டேனு"..இதை வரதட்சிணையை ஒழிக்கும் வழியாக நான் பார்க்கிறேன் ...இன்றைய பெற்றோர்கள் பலர், ஊர் பெருமைக்காக தன் மகனை பெரிய இடத்திலோ, தன் மகளை வெளி நாட்டிலோ திருமணம் செய்து கொடுத்து விட்டு தன் பிள்ளை களை பிரிந்து வருத்தபடுகிறார்கள். (கையில் வெண்ணையை வத்து கொண்டு நெய் அலைவார்கள் சிலர் என்பது பழமொழி)
//ஆனால் வாங்கத்தான் ஆளில்லை... வேலை இல்லாதவனங்கள, யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...??? //
இதுவும் புரியலே...வேலை இல்லாதவனங்கள?? நீங்கள் s/w துறையில் வேலையிழ்ந்தவர்களை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறென் ! உங்களுக்கு தெரியமா,சமீபத்தில் நடந்த அமெரிக்க குழறுபடிகளில் வேலை இழந்தவர்களில் , s/w - துறையை சாராதவர்கள் தான் அதிகம்..
எந்த தனியார் துறையிலுமே, திறமை இல்லாதவர்கள் அதிக நாள் நீடிக்க முடியாது...திறமை உள்ளவர்கள் ,வேலை இழந்ததாலும் வேற வேலை கிடைக்க் ரொம்ப நாள் ஆகாது....
IT - துறையை பற்றி அறியாதவர்கள் தான், ஊடகங்களின் எதிர்மறையான விமர்சனத்தை படித்தும்,சிலர் படித்தவனுக்கெல்லாம் நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கிறதே ..இனி நாம வேலை இல்லாத பட்டதாரிகள் அவர்கள் படிப்பிற்கேற்ற வேலையை எதிர் பார்க்காமல்..சுயதொழில் செய்ய வேண்டும்னு timepass அறிவுரை சொல்ல முடியாதே என்றும், சிலர் பொறாமையின் காரணமாகவும் நம்மை தவறாக சித்தரிக்கிறார்கள்..
IT- துறையை சார்ந்த நீங்களுமா ? ! நான் IT- துறையில் இருப்பவர்கள் எல்லாம் மகாத்மா என்று சொல்லவில்லை ..ஆனால் அவர்கள் தவறானவர்கள் என்று சித்தரிப்பதை தான் எதிர்க்கிறேன். உங்கள் கவிதையின் பொருள் தவிர மற்றவை நன்று !
என்னுடைய பதிவின் பேரும் வளர்பிறை தான்..
வளர்பிறை என்று சொல்லிலே ஒரு positive இருக்கிறது.. positive -வா நினைப்போமே ...!..
நானும் IT - துறையை பற்றி எழுதி இருக்கிறேன்
(http://m-valarpirai.blogspot.com/2009/01/it.html) ...நேரம் இருந்தால் படியுங்கள்..உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்......
இப்படிக்கு உங்கள் நண்பன் .
all the best
கவிதை வரிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. என்னோட பிளாக்ல போட்டுக்கவா. உங்க கவிதைதான கடைசியா உங்க பேரைதான் போடப் போறேன்
இருக்கறததான எழுதி இருக்கீங்க.. நல்லா இருக்குங்க கவிதை..
உங்க கவிதை அருமை. எல்லோரும் அப்படியில்லை. ஆனால் பெரும்பாலும் அப்படிதான்.
I thing u also belong to that category... its all indian nature...i thing so... bcoz no body is perfect india. at the same time i dont know about others.its my personal opinion
Anand
Surukkamake sonnal...ivarkal thanake uruki theyum Mezhukuvarthikal!.. Ennamo enakku appidithan paduthu..
Glad that the kuzhambu turned out well!..
Valar, You write So well!..:)
வெளியில் இருப்பவர் சொன்னால் பொறாமை என்று சொல்லியிருப்பார்கள் .....
நான் செய்தாலும் தவறுஎன்று சொல்ல ஒரு தைரியம் ,பெருந்தன்மை வேண்டும் ....
அதன் முன் தலை வணங்குகிறேன் .
அதனால் தான் முதல் வணக்கம் .
ஒவ்வொரு வார்த்தையும் ....பொன் எழுத்துக்களால் பொறிக்க பட வேண்டியவை ....
ஆனால் வாங்கத்தான் ஆளில்லை...
வேலை இல்லாதவனங்கள,
யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...???
இருக்கான்க ....சகோதரியே .....
இவனை போலவே ....
கற்றது கையளவு ....நான்
UP
அனைவருக்கும் என் அன்புகலந்த நன்றிகள். நான் இந்த வலைபதிவு எழுதுவதற்கு புதியவள். மனதில் தோன்றியதை எழுதினேன், ஆனால் அதன் உண்மையான வெற்றி அது எவ்வளவு தூரம் மக்களை சென்றடைகிறது என்பதில்தான் இருக்கிறது. என்னால் சிறிது காலம் எழுதமுடியவில்லை. தொடர்ந்து எழுத ஆசைப்படுகிறேன் அதற்க்கு உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும். நண்பர்களே...!!!
நட்புடன்
வளர்
Post a Comment