Thursday, August 15, 2013

Happy Independence Day

Can't live in India,
But Can't miss My India,

Because I am in love with my country, which had the origin of so many good things.

Its been corrupted and looted for centuries by kings, foreigners and our own politicians.
Since then we got the attitude of blaming each other for simply everything.

But at this time I would like you all remember what a great people are our ancestors who traveled across the boundaries, who taught the whole world about medicine, yoga, philosophy and trading.

Lets not forget our roots and our freedom fighters, though we don't remember them all the times at least today will salute them for their scarifies.

Lets fight back with our own people who can be teachers, schools, colleges, traders, government staffs, politicians and even someone who does not follow the simple traffic rules and fix them. 

Will start our second freedom fight to get a corruption free country.

"Happy Independence Day" to all my fellow Indians.

Monday, September 24, 2012

கூடங்குளத்தில் வீணாகிறது (வீணானது) பல கோடி!!!

போராடும் ஒரு பகுதி மக்கள் !
பொறுக்காத சக குடிமக்கள் !!

இத்தனை பொருட் செலவில், பல ஆண்டுகாலமாய் கட்டிய கட்டிடம் வீணாவதா?... ஆரம்பத்திலேயே போராடாமல் இப்போது எதிர்ப்பது நியாயம்தானா?

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும், பலவகை மின் சாதனங்களின் மின்சாரத் தேவையும் அணு உலையை அவசியமாக்குகின்றன. இந்த உலை இயங்கினால் தான் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் என்பது போன்ற மாயையை நம் மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது தான் உண்மை. இந்த உலை ஏதோ முழுவதுமாக தமிழ்நாட்டுக்கு பயன்படப்போவது போல் பொய் பிரச்சாரம் எதற்கு? இந்த மின்சாரத்தால்தான் இருளில் மூழ்கிய தமிழகம் ஒளி பெரும் என்றால், இதற்கு முன் எப்போதுமே இருளிலேயேவா இருந்தோம்.? எப்போதும் போல் தமிழ்நாட்டிற்கு அளித்து வந்த மின்சாரத்தை மத்திய அரசு அளித்தாலே பாதி மின் தடை நீங்கிவிடும். இந்த உலையில் இருந்து வரும் மின்சாரத்தில் எவ்வளவு மின்சாரம் யாருக்கு என்பதெல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளிவரப்போவதும் இல்லை. அணு உலை இயங்குவதால் தமிழ் நாட்டுக்கு என்ன லாபம்?. ஆனால் இந்த தருணத்தில் நாம் முக்கியமாக உணரவேண்டியது  பலவழிகளிலும் தமிழன் ஏமாற்றப்படுகிறான், அனைத்தும் அரசியல் லாபத்திற்காகவே நடத்தப்படுகின்றன.

காவிரி நதிநீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, சிறுவாணி குறுக்கே கேரளாவின் புதிய அணை, கச்சத்தீவு பிரச்சனை, இலங்கை கடற்படையினர் பிரச்சனை இவ்வளவிலும் காஸ் பைப் கேரளாவில் இருந்து தமிழக விளை நிலங்கள் வழியாக கர்நாடகம் கொண்டு செல்லும் திட்டம் வேறு .
இதை எல்லாம் எதிர்த்து மத்திய அரசிடம் பேசவோ, வலிமையான போராட்டம் நடத்தவோ முடியாத மந்திரிகள், கட்சிகள், ஆனால் நாடே ஸ்தம்பிக்கும்  அளவில் ஊழல் நடத்த மட்டும் அதிகார மையம் மத்தியில் உண்டு.
இதை எல்லாம் மத்திய அரசு தெரிந்தேதான் செய்கிறதா?  அல்லது தமிழனும் தமிழ்நாடும் ஒதுக்கப்படுகிறதா???

500 கோடிக்கு ஒலிம்பிக் கிராமம் அமைத்து ஊர் அறிய, உலகறிய ஊழல் இந்தியாவின் முகத்திரையை கிளித்துக்கொண்டது. பல்லாயிரம் கோடி நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம்  ஊழல். இதெல்லாம் ஒருபுறம் என்றால், நம் தமிழ் நாட்டில் 1000 கோடிக்கு கட்டிய புதிய "தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம்" புறக்கணிக்கபட்டது, அண்ணா நூலகம் மாற்ற அறிவிப்பு வந்து  பின் அது மக்கள் போராட்டத்திற்கு பிறகு தடுத்து நிறுத்தப்பட்டது.
கோடி கோடியாய் செலவழித்து அதற்கே அதற்க்கென்று பிரத்ஏகமாய் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை அரசிய காழ்புணர்ச்சி காரணமாக தூக்கி எரியும் உரிமையை யார் அவர்களுக்கு கொடுத்தது? அங்குமட்டும் மக்களின் வரிப்பணம் வீனாகவில்லையா? 1000 கோடி செலவு செய்தும் கட்டிடம் முடியும் முன்பே தான்தான்  திறந்துவைக்க வேண்டும், சரித்திரத்தில் இடம்பெறவேண்டும்  என்று கட்டி முடித்ததுபோல மேலும் பல கோடி செலவுசெய்து பிரம்மாண்ட பெருவிழா நடத்தி பெருமை தேடிக்கொண்ட சிறுமை தலைவருக்கு அது மக்கள் பணமென்று தெரியவில்லையா? அப்போது இந்த தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் வீணானது ஏனோ தெரியாமல் போனது. கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை எல்லாம் அரசுக்கு நஷ்டம் இல்லையா? அப்போ டாஸ்மாக் லாபத்தை மட்டும் நம்பியா அரசு செயல்படுகிறது, புது புது திட்டங்களை போடுகிறது?

ஏதோ இந்த அணு உலையால் மட்டுமே கோடிக் கோடியாய் நஷ்டம் ஏற்படும் போல மத்திய மாநில அரசுகள் பேசிவருகின்றன. ஆனால் இந்த அணு உலை என்பது ஒரு  விஞ்ஞான வளர்ச்சி அல்ல, அது தலைமுறைகளைத் தாண்டி வீசப்போகும் விஷமென்ற கதிர்வீச்சு.

எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு, பல முறை மக்களிடம் எடுத்துச்சொல்லி இன்று அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக ஒருமித்து குரல்கொடுக்கையில், அதை ஒட்டுமொத்தமாக நசுக்க முயல்வதா? தேச துரோகம் என்பதா?

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டதற்காக ஒசாமாவை கொன்றுவிட்டேன் என்று மார்த்தட்டும் அமெரிக்கா எங்கே, 28 ஆண்டுகள் கடந்தும் "வர்றேன்  அன்டேர்சன் (Warren Anderson )" தப்பி ஓடவிட்டு இன்னும் பிடிக்க முடியாதபடி நாடகம் ஆடும் நமது இந்திய அரசு எங்கே?. அமெரிக்காவின்  இழப்பு 3000 உயிர்கள்- அதற்க்கே 10 ஆண்டுகளாக போரை நடத்தி வருகிறனர். இங்கோ போபாலில் 8000 கும் மேற்ப்பட்ட மனித உயிர் பலி, அதை தொடர்ந்த நோய்கள், மரபியல் மாற்றங்கள், இன்னும் தீரவில்லை அவர்களுக்கு. வழக்கு விசாரித்து முடியும் முன்னரே அவ்வழக்கில் சம்மந்தப்பட்ட பலர் இறந்துவிட்டனர். இதுதான் நமது நீதித்துறை. இதுபோல் தெரிந்தவை சில, தெரியாதவை பல, ஆனால் நமக்கு மட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை.

இத்தனை நாட்கள் கூடங்குளத்தில் கேட்கப்படாத நம் காதுகள் இன்று சிலரால் நின்று கவனிக்கப்படுகிறது, அந்த மக்களுடன் சேர்ந்து இன்னும் கொஞ்சம் சத்தமாய் ஒலிக்கிறது, அதற்காக இத்தனை நாட்கள் ஒலிக்கவில்லை என்பது பொருளல்ல.

ஏதோ அணு உலை மட்டும்தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் எடுத்து சொல்வது போலவும், அதை விரும்பாத மக்கள் தேசத்துரோகிகள் போல இந்த பிரச்னையை அணுகுவது பகுத்தறிவு ஆகாது என்றே தோன்றுகிறது.
எந்த ஒரு புதிய கண்டிபிடிப்பும் ஆரம்பத்தில் வளர்ச்சியாக தெரிந்தாலும் அதை சிலகாலம் பயன்படுத்திய பிறகே, பயன்படுத்தியவர்களை வைத்து என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்று அறியவருகிறது. அதைப்போலத்தான் பல வளர்ந்த நாடுகளில் இவ்வளவு காலமும் ஏற்படாத விழிப்புணர்வை ஜப்பானியர்களின் உயிர் தியாகத்தால் உலகிற்கு இயற்கை புரியவைத்துள்ளது. (மேலை நாடுகள் அணு சக்தி என்ற பெயரில் நம்நாட்டை சந்தையக்குவது வேறு கதை...!!!).

நம்நாட்டின் இன்றைய தலைவர்களின் மீதோ, சட்டத்தின் மீதோ இருந்த நம்பிக்கை பலவிதங்களில் அவர்களாலேயே அழிக்கப்பட்டு விட்டது. இதுவரை நீதி கிடைக்காத பல விபத்துகள், வருடா வருடம் சிவகாசியில் விபத்து ஏற்பட்டும் எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறைகளோ, சட்டமோ கொண்டுவரப்படவில்லை. சூடு, சொரணை அற்ற மக்களின் உயிர் போகும் இல்லை என்றால் கை கால்கள் போகும் என்று தெரிந்தும் எதிர்த்து கேட்க  இயலாமல் சாவின் விளிம்பில் வாழ்க்கை நடத்துகின்றனர்.

இந்த அரசை... அதிகாரிகளை... நீதித்துறையை... நம்பி அணு உலையா?

இன்னும் ஏமாற தமிழர்கள் என்ன வீரம் இல்லா முட்டாள்களா?
சட்டப்பேரவையை மருத்துவமனை ஆக்க முடியும்போது, நம் தமிழக அரசு, மத்திய அரசும் சேர்ந்து இந்த 1400 கோடிக்கு மாற்று வழி கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு உண்மையான உணர்வின் உரிமை போராட்டத்திற்காக 1400 வீணானதாக இருக்கட்டுமே!!!
மாற்றுவழி மின்சாரம் கண்டுபிடிக்கட்டுமே !!!
ஒரு சமூக மக்களின் போராட்டம் வென்றதாக சரித்திரம் சொல்லட்டும் !!!
இந்த அணு உலையை அதன் வெற்றிச் சின்னமாக்குவோம்!!!

Tuesday, February 14, 2012

ஆர்.டி.ஐ.ஆயுதம்...அலறும் அதிகாரிகள்....

''ஓட்டுப் போடுறது மட்டுமே நம்ம ஜனநாயக உரிமை இல்லை. ஓர் இந்தியக் குடிமகனா, நமக்கு நிறையவே உரிமைங்க இருக்கு. அரசாங்கத்தோட உயர் பொறுப்புகள்ல இருக்கறவங்கள நிக்க வெச்சு கேள்வி கேட்கவும், அவங்க தவறு செய்யுறபட்சத்துல தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த உரிமைகளுக்கு வலிமை இருக்கு. அதை நான் சரியா பயன்படுத்திட்டு இருக்கேன்!''

- குரல் உயர்த்திப் பேசவில்லை. இருந்தாலும் தைரியத்தால் நிரம்பி இருந்தன பூமாவின் வார்த்தைகள்!

குழந்தைகள், கணவர் என்று குடும்பம் சுமக்கும் இல்லத்தரசிகளில் ஒருவர்தான் பூமா. ஆனால், அதோடு தன்னை சுருக்கிக் கொள்ளாமல், 'ஆர்.டி.ஐ' எனப்படும் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்'(RTI - Right to Information Act) மூலம் தனக்கும், தன்னைச் சுற்றி வசிப்பவர்களுக்குமான அடிப்படைத் தேவைகளை பெற்றுத் தரும் பெண் போராளியாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்!

''என்னோட பசங்கள ஸ்கூல்ல இருந்து ஈவ்னிங் 4.15-க்கு கூட்டி வருவேன். திரும்பவும் ஆறு மணிக்கு அவங்களோட நானும் யோகா கிளாஸுக்குப் போயிடுவேன். இடைப்பட்ட நேரத்தில் பேசலாமா..?'' என்று நம்முடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் சொன்னார் பூமா. குறித்த நேரத்தில் சென்னை, அம்பத்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் ஆஜரானோம். எளிமையான உடையும், எதார்த்தமான பேச்சுமாக அறிமுகமானார் பூமா!

''ஊத்துக்கோட்டை பக்கத்துல இருக்கற அனந்தேரி கிராமம்தான் என்னோட தாய்பூமி. ப்ளஸ் டூ வரைதான் படிச்சுருக்கேன். என்னோட காதல் கணவர் ஸ்ரீராமன், தனியார் நிறுவனத்தில் ஜி.எம். அவரோட டிரான்ஸ்ஃபர்களால் 14 வருஷமா இந்தியாவோட பல ஸ்டேட்களை, மக்களை, மொழிகளை, கலாசாரங்களைப் பழகியாச்சு. இந்த அனுபவங்கள்தான் இப்பவும் அரசு அதிகாரிகள், காவல்துறைனு யார்கிட்டயும், எந்தத் தயக்கமும் இல்லாம என்னை அணுக வைக்குது'' என்ற பூமா, முதல் முறையாக 'தகவல் அறியும் உரிமைச் சட்ட'த்தை கையில் எடுக்க வைத்த அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்தார்.

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன குடும்பத்தோட ஆந்திராவுக்கு டூர் போயிருந்தப்போ, டிரெயின்ல டிக்கெட் புக் செய்திருந்தோம். எங்களோட ஸீட்ல வேற ஆட்கள் உட்கார்ந்திருந்தாங்க. கேட்டா, 'டி.டி.இ-தான் உட்காரச் சொன்னார்’னு சொன்னாங்க. அவர்கிட்ட கேட்டப்ப, 'உங்களுக்கு கன்ஃபார்ம் ஆன ஸீட்ஸ் இது இல்லை’னு சொன்னவர், வேற ஸீட்டையும் தரல. அப்போ என் கணவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் வலுக்க, அதை நான் என் மொபைல்ல ரெக்கார்ட் செய்தேன்.

வேற வழியில்லாம டிரெயின்ல நின்னுட்டே வந்த நாங்க, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, ஸ்டேஷன் அதிகாரிகள்கிட்ட நடந்ததைச் சொல்லி, ஆதாரமா எங்க டிக்கெட், மொபைல் ரெக்கார்டை எல்லாம் காட்டி, நடந்த சம்பவத்தை அவங்க கைப்பட எழுதி வாங்கிக்கிட்டோம். டூர் முடிச்சு தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, நடந்த எல்லா விஷயங்களையும் சரியா குறிப்பிட்டு, ஆர்.டி.ஐ. சட்டப்படி கடிதம் போட்டோம். அந்த டி.டி.இ-க்கு தண்டனையா, அவரோட ஊதிய உயர்வை மூணு வருஷத்துக்கு நிறுத்தி வெச்சுடுச்சு ரயில்வே நிர்வாகம். லஞ்சம் வாங்கிக்கிட்டு, எங்க ஸீட்டை மத்தவங்களுக்கு மாற்றிக் கொடுத்ததோட, அதிகார திமிர்ல பேசின அந்த ஆளுக்கு கிடைச்ச இந்தத் தண்டனையை, ஒரு குடிமகனோட வெற்றியா நாங்க கொண்டாடினோம்...''

- இதில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறது பூமாவின் ஆக்கப்பூர்வ முயற்சிகள்.

'இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சட்டத்து மேல எனக்கிருந்த மரியாதை பல மடங்கு கூடிடுச்சு. என்னோட தைரியம் அதைவிட பல மடங்கு உசந்துடுச்சு. கணவரும் என்னை உற்சாகப்படுத்தினார். என் பசங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கறதுக்கு தாமதமாயிட்டே இருந்தது. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஆர்.டி.ஐ. சட்டப்படி ஒரு தபால் அனுப்பினேன். ஒரே வாரத்துல பாஸ்போர்ட் வீடு தேடி வந்துடுச்சு.

சமீபத்தில் வீட்டை புதுப்பிச்சோம். எங்க வீட்டுல வேலை பார்த்திட்டிருந்த கார்பென்டர்கள், வேற ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சதும், அங்க போயிட்டாங்க. பலமுறை தொடர்புªகாண்டும் சரியான பதில் இல்லை. 'இதுக்குக் கூடவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுக முடியும்?’னு நீங்க கேட்கலாம். நிச்சயமா. அந்த கார்பென்டர்கள் எனக்குக் கொடுத்திருந்த பில் உள்ளிட்ட ஆவணங்களை வெச்சுக்கிட்டு, கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டேன். அங்க அது தாமதமாகவே, இந்த விஷயத்தை ஆர்.டி.ஐ. மூலமா நான் கேள்வி எழுப்பினேன். அதுக்குப் பிறகு ஆர்.டி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்க, உடனடியா வந்து வேலையை முடிச்சுக் கொடுத்தாங்க. 15 வருஷமா இழுத்தடிக்கப்பட்ட எனக்குத் தெரிந்தவரின் நில பட்டா பிரச்னைக் கும் ஆர்.டி.ஐ. மூலமாவே பலன் கிடைச்சுது. இதைஎல்லாம் உறவினர், அக்கம் பக்க நண்பர்கள்னு எல்லார்கிட்டயும் பகிர்ந்து, அவங்களுக்கும் ஆர்.டி.ஐ. நம்பிக்கையை கொடுத்துட்டிருக்கேன்'' என்ற பூமா, தொடர்ந்து சமூகப் பிரச்னைகளையும் ஆர்.டி.ஐ. மூலம் எதிர்கொண்டு வருகிறார்.

தெரு பராமரிப்பு, சாக்கடை, கிளை அஞ்சலகம்... என அடுத்தடுத்து பூமா அதிரடி ஆக்ஷன்களில் இறங்க, பகுதி மக்களும் அவருடன் கைகோத்துள்ளனர்.

''ஆரம்பத்துல பொதுப் பிரச்னைக்கான பெட்டி ஷன்கள்ல கையெழுத்துப் போடவே பலரும் தயங்கினாங்க. ஆனா, ஒவ்வொரு படியா வேலைகள் நடக்கறதைப் பார்த்துட்டு, 'ஆளும்பேருமா இறங்குவோம் வாங்க...’னு பலரும் இணைய ஆரம்பிச்சுருக்காங்க'' என்று சொல்லும்போதே, பெருமிதம் அந்த முன்னோடியின் முகத்தில்.

''பாதாள சாக்கடை, குப்பை கான்ட்ராக்ட், மருத்துவமனை குறைபாடுகள்னு எந்தப் பிரச்னையா இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட முறையிடுங்க. ரியாக்ஷன் இல்லைனா, அந்தப் பிரச்னை பற்றி நமக்குத் தெரிய வேண்டிய விவரங்களை கேள்விகளா எழுதி, 10 ரூபாய்க்கான 'நீதிமன்ற முத்திரை வில்லை' (Court Fee Stamp) ஒட்டி, பக்கத்துல இருக்கற தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்துக்கு அனுப்புங்க. அடுத்த 30 நாட்களுக்குள்ள சரியான காரணங்களோட அவங்க பதில் அனுப்பி வைப்பாங்க. விடாம ஃபாலோ பண்ணுங்க. தவறு செய்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவே இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும்!'' என்று எனர்ஜி கொடுத்த பூமா, தன் குழந்தைகள் ஸ்ரீஷ், ஸ்ரீவத்ஷன் இருவரையும் யோகா வகுப்புக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்!

வாழ்த்துகள் போராளியே !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சில குறிப்புகள்...

முதலில், நீங்கள் எதுதொடர்பாக புகார் செய்ய விரும்புகிறீர்களோ... அதை உரிய அலுவலகங்களுக்கு முறைப்படி புகார் மனுவாக அளிக்க வேண்டும் (உதாரணத்துக்கு, சென்னையில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்றால், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிக்கு புகார் அனுப்ப வேண்டும்).

உங்கள் புகார் மனுவுக்கு உரிய பதில் இல்லை என்றால்தான், 'பொதுத் தகவல் அதிகாரி'யை தொடர்பு கொள்ள வேண்டும் (ஒவ்வொரு அரசு அலுவலகத்திலுமே இப்படி ஒரு அதிகாரி இருப்பார்). ஏற்கெனவே நீங்கள் செய்த புகாரின் நகல்களுடன், பத்து ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற முத்திரை வில்லை ஒன்றை புகாரின் முதல் பக்கத்தில் ஒட்டி அனுப்பினால் போதும்.

இதற்கான பதில் முப்பது நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், அடுத்தாக 'மேல்முறையீட்டு அதிகாரி'க்கு, புகாரை அனுப்பலாம். அதற்கும் பதில் கிடைக்க தாமதமானால் 'இன்ஃபர்மேஷன் கமிஷனர்' (தமிழ்நாடு - சென்னை) அலுவலகத்துக்கு அனுப்பலாம். இந்த நடைமுறைகளில் ஏதாவது ஓர் இடத்திலேயே உரிய தகவல் கிடைத்துவிடும். நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.

முதல் தடவை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு செய்யும்போது மட்டும் நீதிமன்ற முத்திரை வில்லை ஒட்டினால் போதும். ஒவ்வொரு முறை அனுப்பும் கடிதங்களின் நகல் மற்றும் அனுப்பியதற்கான அத்தாட்சி ஆகியவற்றை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடிதங்களை பதிவுத் தபாலில் அனுப்புவது நல்லது. -- Anantha vikadan

Wednesday, November 30, 2011

சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி, அதை விற்கிறார் சோனியா காந்தி!

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு

'பரிசுத்தமான லட்சியங்களுக்கு விரோத​மாக நமது செயல்கள் உள்ளன. உலகை மாற்ற வேண்டும் என்றால், நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும். சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது’ - மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், அந்த நாடுகளை எவ்வாறு மீளாத கடனாளியாக... அடிமையாக மாற்றின என்பதைக் குற்ற உணர்வுடன் 'ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்’ புத்தகத்தில் பதிவு செய்து இருப்பார் ஜான் பெர்கின்ஸ். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், இந்தியாவும் இப்படிச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!

சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகள். முதல்வர்கள் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மட்டும் இன்றி, கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் எஃப்.டி.ஐ. சட்டத்துக்கு அகாலிதளம் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தோம். இவர், நாடாளுமன்றத்தில் எஃப்.டி.ஐ. குறித்த விசாரணை நடத்திய நிலைக் குழுத் தலைவராகவும் இருந்து அறிக்கை கொடுத்தவர்.

''இந்தக் கொள்கையை ஏற்று முதலில் அனுமதி கொடுத்தது பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி​தானே. இப்போது நீங்களே எதிர்ப்பது ஏன்?''

''நாங்கள் ஒற்றை பிராண்டில் 26 சதவிகிதம் கொடுத்தது உண்மை. ஆனால், அது ஒரு பரிட்சார்த்த ரீதியாகவே கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த அனுபவத்துக்குப் பிறகு, இதைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம். சிங்கிள் பிராண்ட் என்று அனுமதி வாங்கிவிட்டு, பின்னர் மல்டி பிராண்ட் வியாபாரங்களை நடத்தினார்கள். அதனால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்து, இதில் நேரடி அன்னிய முதலீடு தேவை இல்லை என்று 2009-ம் ஆண்டு வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவில் அறிக்கை கொடுத்திருக்கிறோம்.''

''இந்த அனுமதி மூலம் பணவீக்கம் கட்டுக்குள் வந்து மந்த நிலையில் இருக்கும் அன்னிய முதலீடு மேலும் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறதே?''

''அது உண்மை அல்ல. நம்முடைய சந்தை நிலைமையும் வேலை வாய்ப்புகளும்தான் பறிபோகும். உணவு உற்பத்தியுடன், உணவு சாராத மற்ற உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நுகர்வோர்கள் துன்பத்துக்கு ஆளாகப்போகிறார்கள். வால்மார்ட், கேர் ஃபோர் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாடுகளில், சிறு கடைக்காரர்கள், சிறு சிறு உற்பத்தியாளர்கள், மொத்தமாக நுகர்வோர்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண விவசாயிக்கு இன்றைய தினம் அரசு கொடுக்கும் குறைந்தபட்ச விலையே சரியாகப் போய்ச் சேராத நிலையில், இந்த அன்னிய கம்பெனிகள் என்ன கொடுத்துவிடுவார்கள்?''

''உள்ளூர் உற்பத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பது நல்லதுதானே?''

''அதைக் கண்காணிக்க முடியாது, கட்டாயமும் இல்லை. செருப்பு, தொடங்கி ஆடைகள் வரை எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ, அந்த நாடுகளில் இருந்து வாங்கிவந்து இங்கே விற்பார்கள். சில்லறை வணிகம் அனுமதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இதுதான் நடக்கிறது. இந்த ஆபத்தான சந்தை நமக்கு தேவை இல்லை. இந்த நேரடி அன்னிய முதலீடு நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றும். குறிப்பாக குழந்தைகளின் மனோபாவம் மாறும். அவர்களுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடை, அணிகலன்களின் எல்லாம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களால் ஆதிக்கம் பெறும். மோகம் அதிகரிக்கும். இதில் எந்தப் பலனும் இல்லை என்பதுதான் உண்மை.''

இந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நம்ம ஊர் ஆட்களிடம் பேசினோம்.

வெள்ளையன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்,

''மகாத்மா காந்தி ரத்தம் சிந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். சோனியா காந்தி அதை மீண்டும் அன்னியருக்கே விற்கிறார். அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு பல்வேறு நியாயங்களை அடுக்கினாலும், அவர்கள் இங்கே கால் ஊன்றி ஏகபோகம் அடைந்த பிறகு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை கிட்டத்தட்ட தங்களின் அடிமைகள் ஆக்கிவிடுவார்கள்.

சிமென்ட், மணல் விலையில் கொள்ளை அடிப்பதுபோல அன்னிய நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டு பொருட்களின் விலையை உயர்த்தி விடுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாததுபோல் அப்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் திராணி நம் தலைவர்களுக்கு இருக்காது. இதற்கு உதாரணம், கோக், பெப்ஸி போன்ற பானங்கள்தான். அவை வளர்ந்ததும், உள்ளூர்க் குளிர் பானங்கள் அனைத்துமே அழிந்துவிட்டன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி புரிய அன்னிய நிறுவனங்கள் ஒன்றும் சேவை அமைப்புகள் அல்ல. அவர்கள் நம் நாட்டுக்கு கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவன் இந்தியனே அல்ல.''

விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்,

''இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத்தில் இருப்பவர்கள் ஏழு கோடிப் பேர். இவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் 21 கோடிப் பேர். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சில்லறை வணிகத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. எப்படி? 28 கோடி பேரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு 40 லட்சம் பேருக்கு அன்னியனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் வேலை வாய்ப்பா?

மத்திய அரசு சொல்வதுபோல, அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியாவில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணமே இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவுக்கு மட்டும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, நம் நாட்டு மக்களின் பணம் நமது தேசிய வங்கிகளில் இருந்தது. இன்னொன்று சில்லறை வணிகத்தில் பல கோடிப் பேர் இருந்ததால் தொழில் நிலைத்தது. எனவே, எக்காரணம்கொண்டும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.''

தேசிகன் அறங்காவலர், கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் இந்தியா,

''உலகம் முழுவதும் பல நாடுகள் திவால் ஆகி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் சுதாரித்துக்கொண்டு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள முனைகின்றன. ஆனால், மத்திய அரசோ அன்னிய முதலீடு என்கிற முதலையிடம் மக்கள் தலையை நுழைக்கிறது.

கோயில் வாசலில் பூ வாங்கி வைத்துக்கொள்ளும் நிலைமை மாறி, சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் அநியாய விலை கொடுத்துப் பூ வாங்கும் நிலை ஏற்படும். அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டிலேயே பொருளை உற்பத்தி செய்தால் மட்டுமே, நம் நாட்டுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அவை இங்கே இருக்கும் பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்கிப் பதுக்கிவைத்து கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்யும். இதனால் நம் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை. இது நம்மைப் பகடைக்காய்களாக்கி அன்னிய நிறுவனங்கள் நடத்தும் சூதாட்டத்துக்கே வழி வகுக்கும்.''

சின்னசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்,

''10 ஏக்கரில் விவசாயம் செய்பவன்கூட சிறு விவசாயிதான். ஏனெனில், உரம், மின்சாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் அவனுக்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 90 சதவிகிதம் சிறு விவசாயிகள்தான். இனி அன்னிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்வார்கள்; நல்ல விலை கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள். அப்படியே நல்ல விலை கொடுக்கவும் செய்வார்கள். இப்படி செய்யும்போது, இதர உள்நாட்டு முதலாளிகள் பராம்பரியத் தொழிலைவிட்டு அழிந்துபோவார்கள். படிப்படியாக மொத்த விவசாயிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பின்பு, அன்னிய நிறுவனங்கள் திடீர் என்று கொள்முதல் விலையைக் குறைத்துவிடுவார்கள். விவசாயிகளுக்கு வேறு வழி இருக்காது. அதனால், அடிமாட்டு விலைக்குத்தான் பொருளை விற்க வேண்டும்.

அடுத்த தாக்குதல் இன்னும் அபாயகரமானது. தாங்கள் கொடுக்கும் விதையைத்தான் நட வேண்டும்; நாங்கள் சொல்லும் பயிரைத்தான் வளர்க்க வேண்டும் என்று மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் திணிப்பார்கள். மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளை நடுத்தெருவுக்குத்தான் கொண்டுவரும். இதனால் நாட்டுக்குத்தான் கேடு!''

- சரோஜ் கண்பத், டி.எல்.சஞ்சீவிகுமார்



காங்கிரஸிலும் எதிர்ப்பு!



எதிர்க் கட்சித் தலைவரான ஜோஷி மட்டுமல்ல ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு வந்துள்ளது. இந்த எஃப்.டி.ஐ-யை அனுமதி அளிக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது எதிரொலித்​தது. சோனியா காந்தியின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, முகில் வாஸ்னிக் போன்ற காங்​கிரஸ் அமைச்சர்களும் தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் தினேஷ் திரிவேதி போன்றவர்களும் தங்கள் கட்சி சார்பில் இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Thanks Anandha vikadan

Tuesday, April 12, 2011

கருணாநிதி பதில் சொல்வாரா????

இன்றைய மாலை மலரில் வாசகர் வெங்கட்ராஜ், கேட்கிறார்:

கருணாநிதி​க்கு:
1. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்களுக்கும் சுயமரியாதை, வாழ்வுரிமை, தொழில் செய்யும் உரிமை, சொத்துரிமை எல்லாம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா ?

2. பணத்துக்காகத்தான் மது விற்பனையை அரசின் மூலம் செய்கிறீர்கள் என்றால், நாளைக்கு பணம் வரும் என்பதற்காக விபசார விடுதிகளையும் உங்கள் அரசே நடத்துமா?

3. உங்கள் மனைவி திருநள்ளாறு பரிகார பூசைக்கு செல்வதாக செய்தி வருகிறது. மனசாட்சிப்படி சொல்லுங்கள்,. நிஜமாகவே நீங்கள் நாத்திகர்தானா?

4. முதல்வராக சிறப்பாக ஆட்சி புரிந்ததாக நம்பிக்கை இருந்தால், ஏன் உங்கள் கட்சியே தனித்து எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டிருக்கக் கூடாது? அந்த நம்பிக்கை இல்லாதது ஏன் ?

5. பெயருக்கு ஒரு பட்டப் படிப்பு படித்துவிட்டு, சுய சம்பாத்தியம் இல்லாமல், கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க உங்கள் பேரன்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?

6. உங்கள் குடும்ப பிரச்சனையில் 3 பேரை தீயிட்டு கொளுத்தியதை நினைத்தபோதும், உங்கள் இதயம் இனிக்கிறதா?

7. தமிழக அரசிற்கு நீங்கள் ஏற்றி வைத்துள்ள பெரும் கடன் சுமையை எப்படி திருப்பிச் செலுத்த்ப் போகிறீர்கள் ? அதற்கு ஏதாவது குறிப்பான யோசனை உண்டா?

8. இலவச ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை அதற்கு பதில் ஏற்கனவே இலவசமாக இருக்கும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த செலவிடாதது ஏன் ? தனியாருக்கு லாபம் சேர்த்துத் தரவா ?

9. ஒரு மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு துணைவியுடனும் பகிரங்கமாகக் குடும்பம் நடத்தும் உங்கள் வாழ்க்கை முறை தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானது. தவறான முன்னுதாரணம் என்பதை உணர்ந்து எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா? என்னைப் பின்பற்றவேண்டாம் என்று இளைஞர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் நேர்மை உங்களுக்கு உண்டா?

10. கூவத்தை தூய்மையாக்குவேன் என்று 25 வருடம் முன்பே திட்டம் போட்டீர்கள். அந்த பணம் என்னவாயிற்று ? ஏன் இப்போது மறுபடியும் திட்டம் போடுகிறீர்கள்? இது கூவத்துக்காகவா? உங்கள் நலனுக்காகவா?

11. 25 வருடம் முன்பே பிச்சைக்காரர்களை ஒழித்துவிட்டேன் என்று அறிவித்தீர்கள். இப்போது ஏன் எல்லா ஊர்களிலும் பிச்சைக்காரர்கள் திரிகிறார்கள் ? ஏன் ஆயிரக்கணக்கான்வர்கள் தெருக்களில் வசிக்கிறார்கள் ? ஐந்து முறை நீங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்?

12. ஐந்தாண்டுகளாக வெளி நாட்டில் வாழ்கிறேன். ஒரு அரசு ஊழியருக்கோ ஒரு காவல் அதிகாரிக்கோ ஒரு தம்படிக் காசு கூட லஞ்சமாகக் கொடுத்ததில்லை. அவர்கள் கேட்டதும் இல்லை. இங்கே வந்த சில தினங்களிலேயே ஒவ்வொரு இடத்திலும் என்னிடம் லஞ்சம் கேட்கிறார்களே, இதற்கு நீங்கள்தானே பொறுப்பு ?.

13. மின் வெட்டை தடுக்க 5 ஆண்டுகளில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

14. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?

15. தமிழினம் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டபோது பதவிக்கு சண்டையிட்ட உங்கள் கட்சியை நம்பி எப்படி வாக்களிப்பது? 2008ல் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்து மத்திய அரசிலும் பங்கு பெற்றிருக்கவில்லை எனில் ஈழப்பிரச்சினையை எப்படி கையாண்டிருப்பீh;கள்?

16. உங்கள் ஊழல் பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நூலகங்களில் இருந்து எடுத்தது ஏன்?

17. தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சர் பதவி தன் வாரிசுகளுக்கு வாங்குவதற்கு தவிர நீங்கள் டெல்லி சென்றது எத்தனை முறை? எதற்காக?

18. பாராட்டு விழாக்கள் , சினிமா கலை நிகழ்ச்சிகள், நடிகையின் திருமணம் போன்றவற்றிற்கு ஓடோடி செல்லும் நீங்கள் , எத்தனை முறை இறந்து போன மீனவர் குடும்பங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள்​?

19. பல வருடங்களாக கட்சியிலிருந்து உழைத்த தி.மு.க. தொண்டர்களை விட, தயாநிதி மாறனும் அழகிரியும், கனிமொழியும் மக்களவை உறுப்பினராகவும், மத்திய மந்திரியாகவும் ஆவதற்கு என்ன தகுதி ?

20. உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் , மணல் கொள்ளை, திரைப்படத்துறை முழுமையான ஆக்ரமிப்புக்கும் உள்ள தொடர்புகளை உங்கள் மனசாட்சியால் மறுக்க முடியுமா?

----
திரு.வெ​ங்கட்ராஜ் உங்களது ஒரு கேள்விக்குக் கூட பதில் கிடைக்காது.

Friday, April 1, 2011

கடவுளே எங்கள எப்படியாச்சும் காப்பாத்து....

தமிழ் நாட்டு மக்களே எப்படியய்ய ஊருக்குள்ள தன்மானத்தோடு இருக்கீங்க??? ஒருநாள் கொஞ்சநேரம் இந்த டிவி யை பார்த்ததுக்கே ரொம்ப கேவலமா இருக்கு, வேட்பாளர்கள் முஞ்சிஎல்லாம் பாத்தாலே அவங்க தகுதி என்னனு தெரியுது. இதவேற எப்போ பாத்தாலும் திரும்ப திரும்ப போட்டு காட்டுறாங்க. அவங்க அவங்களுக்கு ஒரு டிவி வேற. இந்த மோகரகட்டைங்கள நம்ம தமிழ்நாட்டோட தலை எழுத்தை மாற்றப் போகுதுங்க. நல்லவேளை நான் ஊருக்குள்ள இல்ல. கண்டிப்பா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். கூடிய சிக்கிரம் அது நடக்கும்.
விஜயகாந்த் வேட்பாளர்களை எல்லாம் பாத்தீங்களா, என்ன எதுன்னவது அவனுங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியல. பேப்பர கிழிச்சு போட்டு விசில் அடிச்சு கைதட்டி படம் பாத்தவன் எல்லாம் இன்னக்கி வேட்பாளர!!!!.... ஜெயலலிதா, விஜயகந்துனு இந்த ரெண்டு ரெண்டுகேட்டனுங்கள நம்பறதே வேற வழி இல்லாமதான். ஆனா அவரோட திரைமறைவில் இருக்குற இந்த அல்லக் கைகளெல்லாம், யாரு எவரு, என்ன தகுதி இருக்கு நம்பி ஓட்டு போடா.
கடவுளே எங்கள எப்படியாச்சும் காப்பாத்து....

Saturday, March 5, 2011

காதலில் விழுவோமா!

காதலிப்பதை காதலிப்பதால்,
காதலை காதலிக்கிறேன்!!

சூழலை மறக்கச் செய்ததாலோ,
சுற்றம் மறந்ததாலோ,
காதலிக்கிறேன் காதலை...!!!

எதிர் கொண்ட பார்வையிலே
எடுத்துச் சென்றாய் முழுமையாய் என்னை.
நீண்ட நேர காத்திருப்பும்,
நெடுநேர உரையாடலும்,
மறந்து போனது பசி, உறக்கம்!!

கை பிடிக்கும் நாளை எண்ணியே,
கனவுகள் எப்போதும்.
உறவுகளை பிரியும் வருத்தத்தை விட,
உன்னை கைபிடிக்கும் குதுகலமே அதிகம்!
புரியாத உணர்விலே,
பூரித்த நாட்கள்...

சிரித்து சிறகடித்த நாட்கள்
நகர்த்தாமலே நகர்ந்த காலங்கள்,

இன்றைய காதலர்களை பார்க்கும்போது,
சிறிதாய் ஒரு பொறாமை!

மீண்டும் ஒருமுறை காதலிக்க ஆசை,
நம் காதலை புதுப்பித்தால் என்ன?

Tuesday, October 5, 2010

அயோத்தியும், அயோக்கியர்களும் - சில உண்மைகள்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்னும் வழக்கில், அலஹாபாத் நீதிமன்றம் கடந்த 30ம் தேதி புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதுமுதல், பார்ப்பன வெறியர்கள் பல்வேறு பொய்களை அள்ளி இறைத்து வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தோழர்கள் மணி மற்றும் ஏழர ஆகியோர், அயோத்தி நிலம், ராமர், பாபர் மற்றும் பாபர் மசூதி தொடர்பான பல தகவல்களையும் தொகுத்துள்ளனர். இந்த உண்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தவேண்டும் என்பதாலும், உண்மையான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அவற்றை இங்கே பதிவிடுகின்றோம்.

(மொத்தத் தகவல்களின் நீளம் கருதி, மிக முக்கியமானவை bold செய்யப்பட்டுள்ளன)

#சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

#உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும் செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்

#த‌னது பலவீனத்தை தோலவியை தடுமாற்றத்தை வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை பாபர் நமா வைப் போல

#டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது

#இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்

#மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயில்ல் பாபர் கூறுகிறார்

#திரேதா யுகம் முடிவுக்கு வந்த்து கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்#ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்த்த‍ற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி#


#பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்

#ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்

#அவனை அவனது சகோதர சகோதரிகளான் லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

#தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு

#வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

#சீதை கடத்தப்பட்ட கதை இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்த்து

#வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது#நாகார்ஜூனா

# கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றையஅயோத்தி கங்கைகரையில் இருந்த்து என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்

# தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ ந்திக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்

# அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது

# மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி

#அந்தகாடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில்சிக்கவில்லை

#இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology - Areview 1979-80 page 76, 77 - cofirms the research-done by BB Lal, KN Thetchikth

#சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆயவு வேறு முடிவை தந்த்து

#விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

#ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

#12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை#ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

#கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமர‌கோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை

#இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை

#எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழிதிய ஆய்வுக்குறிப்போட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா எர்நாக் சான்சி பாம்ரா நாச்னா போன்ற‌

#இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார் இல்லையா

#பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான்#அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து ராமன் தூக்கப்பட்டார்

#ராமர் கோவில் இடிக்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராமசரித் மானஸ் என்றஅவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை
#இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரிய்ர் கோபால் கேட்கிறார்

#பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாகதனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

#அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜ௺த்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை#பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூன் ஒரு அகதியாக திரிந்தான்

#18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மத பைசாகி பிரிவுதான் செல்வாக்கில் இருந்த்து#இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி

#தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது#குவாலியரி கோவில் சிற்பங்களை ரசித்த்தை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர்

#ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா

#அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி

#வ‌ரலாற்றை முழக்க வரவில்லை. துரோகத்தை சுட்டிக் காட்டப் போகிறேன்#பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

#1845ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை #மன்னிக்கவும் பைராகி என்ற சைவ வழிபாடு என்பது தவறாக முன்னர் குறிப்பிட்டு விட்டேன். சைவ மரபு என்று மட்டும் புரிந்து கொள்ளவும்

#1856 ஜ‌னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது

#இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர் #மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்

#வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்த்து டல்ஹ௴சியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்த்து #பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்ன்ன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்

#அவ‌னது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்

#பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாகபிறந்த ஒரே குற்றத்துக்காககட்டாத வரிக்கு பதிலாகபெண்ணையே மனைவியாக்கிகொண்டிருந்தான் அந்தமன்னன்

#அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை#ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்

#ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள்#ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்

#அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான்#அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத் க்கு வந்தார்

#பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா

#ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.

#ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71

#அக‌மது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்

#அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார்#மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்‌

#ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ்Defence of Lucknow (1858 edition) #இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு

#பாபர் மஸதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது

#முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்த்தை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன‌

#கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி


#த‌னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் #முதன்முதலாக பாபர்மசூதி கட்ட ப‌யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில்இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர
#இன்றுமட்டுமாவரலாற்றைதிரிக்கிறார்கள்

#ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள்

#1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்த்து#ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி#பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்

#1885ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ணசாஸ்திரியின் சிவில்கோர்ட்டில் வ.எண் 61/280 பதிவு செய்கிறார் #படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்

#அவுத்மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. but பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது

#இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் ஏ.பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது

#ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் அதாவது இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது#கல்வெட்டில் உள்ள செய்தி

#ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்

#இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல்மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்குகன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்

#1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60)குறிப்பிடுகிறார்

#அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்

#க‌லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஃஆதாரம் உள்ளது

#1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்

#இதற்கு காரணமான கேகே ந்ய்யர் கூட இந்த அற்புத்த்தை ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது

#மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார்

#அகற்ற வாய்பு இருந்த்தை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்

#சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949டிச23 மசூடிக்கு பூட்டு

#உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்-அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் #சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்

#இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்த்து. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
#ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை

#ஜன61950ல் சூட் நம்ர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்ku

#அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.உபி அரசுசாப்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் #மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர்

#சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார். மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச வ.எ.12கீழ் வந்தது

#ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி

#அக்7,1984இல் அயோத்தி வ்ந்த்துமசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே(பூட்ட உடை)முழக்கம்ஆனது

#அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டுஉடைபடும் என்றனர்விஇப‌

#டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர்

#பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே ஐ சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்

#உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது)ஒருவர் முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்கதடையை நீக்ககோருகிறார்

#முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரனமாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக #மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்

#உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்த்து நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்

#தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை35ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் endrum

#பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும்

#தீர்ப்பளித்த பாண்டே பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986,4.40க்கு உத்தரவிட5.20க்கு அமல்னது

#பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா #க‌லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்த்து

#1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து #1986சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிட்ம்

#முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது #நவ9,1989இல் 25கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4 க்ட்ட‍ நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது

#எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,

#அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்த்து. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமற்ற ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது

#ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்த்து. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ்

#அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் #தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்

#முசுலீம்களின்அடக்கதலத்தின்மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்ல் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்

#ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு #முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.

----
மானஸாரா என்ற இந்துகட்ட்ட‍ கலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்-எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா.

மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.

அக்பர் தான் எழுதிய திவான் இ அக்பர் என்ற நூலில்
ததானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார்.
மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்

பாப்ர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆஃனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643.

ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மஸதிற்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989)

பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்த்தை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362)

பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள். இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்துதான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்• ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றுயிம் குறிப்பு உள்ளது.

-----
பதிவர் செங்கொடியும் இந்தத் தகவல்களை பதிவாக இட்டுள்ளார். உண்மையான வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என விரும்பும் பதிவர்கள், தோழர்கள் திரட்டிய தகவல்களை தங்களது தளங்களிலும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

[ P.S ]I have reshared from http://allinall2010.blogspot.com/2010/10/blog-post.html

Friday, September 24, 2010

மரங்களை வளரவிடாதீர்கள்; வேருடன் வெட்டுங்கள்


சில சமயத்தில் பயனம்செய்யும்போது இந்த மரமாவது பசுமையாக எங்கும் காட்சி தருகிறதே என்று நினைபதுண்டு..., அனால் இதனை கொடுமை உள்ள மரம் என்று இன்று தான அறிந்தேன்.

இதற்க்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு காணமுடியும். மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவரவேண்டியது அரசின் கடமை. இதைப்பற்றி சுகி சிவம் அவரது நிகழ்ச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்பே இதன் விளைவுகளை விளக்கியுள்ளார் என்பது இப்போதுதான் ஒரு செய்தி முலமாக தெரியவந்தது. இப்படி பலரும் பலமுறை பல இடங்களில் பேசத்தான் செய்துள்ளனர் அனால் எத்துனை பெருக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு உள்ளது?. எத்தனை விவசாயிகள் அல்லது கூழி தொளிலளில்கள் தினசரி நாளிதழ்களை படிக்கின்றனர்...? நாட்டு நடப்புகளைப்பற்றி கவலைப்படுகின்றனர். இது அரசின் கடமை. எவ்வளவுதான் வளர்ச்சிப்பணிகள் வந்தாலும் இலவசங்கள் கொடுக்கப்பட்டாலும் இதன் பதிப்பை நிறுத்தாவிட்டால் என்ன பயன்??...

இதற்க்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் நம் அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே. திரைப்பட விழாக்களையும் பாராட்டு விழாக்களையும் நடத்திக்கொண்டுள்ளது. வேண்டாம் விடுங்க இதைப்பற்றி பேசினான் எழுதி முடியாது. எந்த அரசு வந்தாலும் இதே நிலைமைதான். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நாடென்ன செய்தது நமக்கு என்று நினைப்பதை விட நாமென்ன செய்தோம் என்று யோசிக்கலாமே? இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இங்கு நாம் போர்க்கொடி உயர்த்தினோம். அதுபோலத்தான் இதுவும்.


எதற்காக நாம் அரசின் நடவடிக்கைகளுக்காக காத்து இருக்கவேண்டும். நாம் ஏன் இதை துண்டு பிரசுரமாக அச்சிட்டு நமது சொந்த ஊர்களில் விநியோகம் செய்யகூடாது? என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டு இருப்பதைவிட ஏதாவது செய்யலாமே... நமது அடி முதல் அடியாக இருக்கட்டுமே.. நமது ஊர் பஞ்சாயத்து அல்லது பேரூர்ஆட்ச்சிகளின் மூலமாககூட இதை விநியோகம் செய்யலாம். இன்றைய காலத்தில் அதிக அக்கறையுடனும் எதாவது உபயோகமாக செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடனும் இருப்பவர்கள் நம் மாணவர்கள் அவர்களிடத்தில் இதை கொண்டு சேர்க்கலாம். எப்படியும் ஒரு விவசாயியோ அல்லது கூளித்தொளிலலியோ தனது மகனையோ அல்லது மகளையோ கனவுகளுடன் படிக்கவைத்துக்கொண்டு இருப்பார் கண்டிப்பாக இது அனைவரையும் சென்றடையும். நாம் ஒவ்வொருவரும் படித்துவிட்டு கருத்து கூருவதுடனும், கவலைப் படுவதுடனும் இல்லாமல் எதாவது செய்தோம் என்ற திருப்ப்தியவது இருக்கும் அல்லவா? நாம் தான் இந்த அரசாங்கத்தை சினிமா காரர்களுக்காக கொடுத்துவிட்டோம். அவர்களிடத்தி இருந்து ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. வேண்டுமென்றால் இன்னுமொரு மெகா பஜ்ஜெட் திரைப்படம்....!!!!


நாம் செயல்படுவதை பார்த்தாவது அவர்கள் செயல்படட்டுமே???. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் பூமியை நாமே காப்போம். -நன்றி

[P.S] If you have any other ideas to take action to fix this, Please post as response. Or if you think this way we can do something please share this with your friends. More than sharing if you act, that will be really great..... Thank you all.

Wednesday, September 22, 2010

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! ) நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

"மனிதன் சுயநலவாதியாக வாழ்வது காற்றைவிட லேசானது",
"மனிதன் பொதுநலவாதியாக வாழ்வது மழையைவிட கடினமானது!"
[This post has been re-shared ]

Friday, September 10, 2010

மதமுன் நம் நம்பிக்கையும்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றில் உள்ள சாரம்சங்கள் ஒன்றே.
/*வரலாறுகளை பாருங்கள். சிலுவைப் போரில் இருந்து இன்றை போராடங்கள் வரை மதத்தின் போராட்டங்களாகவே தொடருகின்றன. */
இவையெல்லாம் இடையிலே வந்த்தவை. எப்போது மதத்தை வியாபாரமாக செய்தார்களோ அப்போது தோன்றியது. எங்கள் மதத்தில் சேருங்க ஒசிஎலே பிரயாணி போடுவோம் பணம் தருவோம், நிறைய குழந்தைகளை பெற்று மதத்தை பெருக்குங்கள் என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியபோது வந்தது.

எந்த மதமுன் எந்த உருவ வழிபாட்டையும் சொல்லவில்ல. பகவத் கீதா கூட சொன்னது ஒன்றுதான் நீ உன்னை அறியவேண்டும்.. எல்லமே ஒன்றுதான் அது தான் பரமாத்மா. கிருஷ்ணா ஒரு மன்னர் ஆதிகாலத்தில் மக்கள் மன்னரை கடவுளாக வழிபட்டனர் அதனால் அவர் இன்னும் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். அவர்கள் அனைவரும் யோகா சித்து கலைகளை கற்றிருந்தனர். அதுபோலதான் ஏசுவை பற்றி சொல்லும்போதும் O அவர் ஒரு யோகி அதனால் தான் அவர் 3 நாட்கள்வரை உயிர்த்து இருக்கமுடிந்தது என்கின்றனர். அவர் அப்போது கூறிய சமத்துவ கருத்துக்களை அன்று வாழ்ந்த மக்கள் ஏற்க்கவில்லை அதனால் தேசத்துரோகியாக கருதப்பட்டார்.. அதுபோலதான் நபிகளும்..

நமக்கு மதத்தை போதித்த அனைவரும் கூறியது ஒன்றே.... நீ உன்னை அறியவேண்டும் அதற்க்கு இந்த மார்கத்தை நாடு ஏனென்றால் நான் இதைதான் நாடினேன்...

ஆனால் இப்போது கூட்டம் சேர்ப்பதற்காகவும் தொண்டு நிறுவனம் என்றபெயரில் பதுக்கல் செய்வதற்கும் பயன்படுத்தபடுகிறது. அதற்க்கு சில சித்து வேலைகளை அந்தந்த மதத்தினர் செய்து மக்களை ஈர்கின்றனர்.

ஆனால் வேதங்களும், மதங்கள் என்றபெயரில் சொல்லப்பட்ட கருத்துக்களும் நம்முன்னோர்கள் நமக்கு விட்டுசென்ற பொக்கிசங்கள், அது காலப்போக்கில் திரிந்து விட்டது. திரிந்ததை பற்றி நாம் எதற்கு பேசவேண்டும்.
இந்த உண்மையை அறிந்தவர்கள் இந்த விவாதத்திற்கே வரமாட்டார்கள்.

Friday, July 9, 2010

பிறந்தநாள் வாழ்த்து

நகரவிடாமல்...
உன்னை இறுக பிடித்துக்கொள்ள ஆசை,
ஆனால் இந்த காலம் மட்டும் நகர்கிறதே...!!!

Friday, December 12, 2008

Software மாப்பிள்ளை

சுயநல வாதிகளின் கூடாறம்
இந்த மென்பொருள் துறை...
எப்படி சொல்கிறேன் என்கிறீர்களா..??
ஏனென்றால் நானும் ஒரு சுயநலவாதிதான்...

கொஞ்சம் கூடக் கொடுத்தால் போதும்,
முகவரி கொடுத்தவனை மறந்து...
பறந்து இல்லை... இல்லை... தாவிச் செல்லும்
இதயமற்றவனுக்கு பெயர்
software engineer

விடியவிடிய வேலை பார்ப்பான்,
வெளிநாட்டினர் சுகமாய் வாழ!

சம்பாதித்ததை கொண்டுபோய்
"சால்சா"வில் தொலைப்பான்..

மூளை இருந்தும்...
முதுகெலும்பு இல்லாதவன்.

ஒருமுறை பறந்து சென்று
வந்துவிட்டால் போதும்...
50 சவரனில் இருந்து 100 ஆக்கி
அவனையே விற்றுக்கொள்வான்...

ஆனால் வாங்கத்தான் ஆளில்லை...
வேலை இல்லாதவனங்கள,
யாரு அவ்வளவு காசுகொடுத்து வாங்குவா...???

Monday, December 1, 2008

நானும் அவளும்

முதல்நாள் வகுப்பறை நுழைந்ததும்
பரிச்சயமே இல்லாத இடத்தில்
பளிச்சென்று உன் புன்னகை
கட்டி இழுத்து உன் அருகே அமரச்செய்தது...

நான் இருக்கின்றேன் என்று கைகோர்த்து
உன் மீது காதல் கொள்ளச்செய்தாய்...!

நாம் சுற்றித்திரிந்ததில்
தேய்ந்து போயின தெருக்கள்
நாம் சிரிப்பொழி தாங்கியபடி...

நீ இருக்கும் இதயத்தை
யாருக்கும் தர விருப்பம் இல்லை !

என் காதல் வட்டம் பறந்து விறிந்தது
உன்னை மட்டுமே சுற்றி...

துக்கத்தில் சிரித்ததும்
சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து அழுததும்
உன்னிடத்தில் மட்டுமே...!!!

உன் மகளுக்கு நான் மாமியார்
என் மகன் உனக்கு மருமகன்
என்றதற்க்கு....
ஒருவனையே மணந்துகொண்டு
என்றும் பிரியாமல் இருப்போம்
என்று கைகொட்டி சிறித்தாயே!!!

மணப்பெண் தோழியாய் நிற்ப்பாய்
என் புது வாழ்வு தொடங்கும் பதற்றத்தை
பக்கத்திலிருந்து தனிப்பாய்
என்றாயே!!!!

இத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு
எங்கேயடி சென்றாய்...???

உன்னைத் தேடித் திறிந்து
இந்த உலகமே தீர்ந்து போயிற்று...
உன் மூச்சுக் காற்றை கூட காணோமே!!!

என் உயிர் தோழியே...
இந்த மாபெரும் உலகத்தில்
உன் ஒருத்திக்கு மட்டும் தான்
இடம் இல்லாமல் போயிற்றா...???

காதலில் தோற்றதால்
காடு சென்றாயே!!!

என் காதலுக்கு என்ன பதில்
சொல்லப்போகிறாய்...???

Tuesday, November 25, 2008

அரசமரம்


அரசமரப் பிள்ளையாரை கண்டால்
வணங்காமல் போனதில்லை

விநாயகர் வினை தீர்ப்பார் என்பதற்கல்ல...
அரசமரத்தை காப்பதொடு மட்டுமல்லாமல்,
அதை சுற்றிவந்து நீர் ஊற்ற வைத்தாரே!!!

இல்லை என்றால்
அது என்றோ விறகாகவோ...
வீட்டு முற்றமாகவோ மாறி இருக்ககும்

விநாயகரின் அருளால்...
அரசமரமும் ஆனது கடவுளாக!!!

சுற்றி வந்தால் பிள்ளை வரம் கொடுக்குமாம்
அரசமரம்...!!!

கவிதை

கவிதை எழுதும் அவா எனக்கு.
சிலர் கூறினார்கள் காதலிக்க வேண்டும் என்று...
பலர் கூறினார்கள் காதலித்து தோற்க வேண்டும் என்று...

தெளிவாக இருந்தால் கவிதை வராதோ!!!

Wednesday, November 19, 2008

மதம்...???

"நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல...
எல்லா மதமும் என்னை சார்ந்தது... ஓசோ "

Tuesday, November 18, 2008

ஓர் குட்டி கதை!!!

முன்பொரு காலத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தார் அப்பொழுது சிறிய பூனை ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தது. சீடர்களின் கவனம் சிதறாமல் இருக்க அந்த பூனையை பிடித்து அருகில் இருந்த தூணில் கட்டிவைத்தார்.
இவ்வாறு தினமும் அந்த பூனையை தூணில் கட்டி வைத்துவிட்டு பாடம் நாடத்தினார். ஒரு நாள் அந்த முனிவர் இறந்து விட்டார். அவரை அடுத்து வந்தவர்களும் அதெபொல் செய்தனர். ஒரு நாள் அந்த பூனையும் இறந்து விட்டது. அனால் தினமும் பாடம் நடக்கும் போது ஒரு பூனையை கொணடுவந்து தூணில் கட்டி வைப்பதை அதேபோல் வழக்கமாக கொண்டனர் அவரை தொடர்ந்து வந்தவர்கள்.

இதுபோல் தான்... ஒரு வெற்று காகிதம் போல் எந்த எழுத்துக்களும் இல்லாமல் பிறக்கும் குழந்தையின் மீது இந்த உலகம் பல்வேறு வாழ்க்கை முறைகளை அச்சிடுகிறது. நாமும் அதையே தொடர்ந்து செய்து வருகிறோம்... ஏன்...! எதற்கு...!! என்று...!!! கேள்வி கேட்காமல்...